பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலேரியா

235

யினையும் நேரடியாக நோயாளிகளிடமிருந்து தெரிந்து கொள்வது அவசியம். இதற்காக மருத்துவக் கல்லூரிகள் பெரும்பாலும் பொது மருத்துவமனைகளையொட்டியே அமைக்கப்படுகின்றன.


மருந்து : நாம் எப்போதாவது நோய் வாய்ப்பட நேரின் அந்நோயைப் போக்கிக் கொள்ள டாக்டரை அணுகுகிறோம். அவர் தரும் மருந்தை உட்கொண்டு நோயைப் போக்கிக் குணமடைகிறோம். சில மருந்துகள் நோயைப் போக்கும் தன்மையுடையனவாகும். இன்னும் சில மருந்துகள் நோயைப் போக்குவதோடு மேலும் நோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டிருக்கும்.

தொடக்கக் காலத்தில் நோய் தீர்க்கும் மருந்துகள் பலவற்றையும் தாவரப் பொருட்களிலிருந்தே தயாரித்துப் பயன்படுத்தினர். இம்முறை இங்கு மட்டுமல்லாது உலகெங்கும் இருந்தே வந்துள்ளது. இன்றுகூடச் சில குறிப்பிட்ட நோய்களுக்குத் தாவரப் பொருட்களைக் கொண்டே மருந்து தயாரித்துப் பயன்படுத்தி வருகிறோம். சான்றாக, மலேரியாக் காய்ச்சலுக்குக் கைகண்ட மருந்தாகப் பயன்படும் 'கொய்னா மாத்திரைகள்' கொய்னா மரத்திலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறே அறுவை மருத்துவத்தின்போது நோயாளிக்கு அறுவைப் பகுதியில் வலி ஏற்படாமலிருக்க அப்பகுதி மரத்துப் போகச் செய்யப் போடப்படும் கொக்கெயின் மருந்தும், தூக்கத்தையுண்டாக்கவல்ல மார்ஃபின், அபினி போன்றவைகளும் தாவரப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவைகளேயாகும். இத் தாவரமருந்துகள் இன்றும் உலகெங்கும் பயன்படுத்தப்பட்டே வருகின்றன. ஆயுர்வேத மருந்துகள். சித்த யுனானி மருத்துவ முறைக்கான மருந்துப் பொருட்கள் பலவும் மூலிகைகளை அடிப்படைப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றது. சித்த மருத்துவத்தில் சிலவகை தாது உப்புக்களைக் கொண்டும் மருந்துகள் செய்யப்படுகின்றன.

சிலவகை மருந்துகள் விலங்குகளின் சீரத்திவிருந்து தயாரிக்கப்படுகின்றன. கால்நடைகளின் கணையத்திலிருந்து சுரப்பிகள் மூலம் பெறப்படும் சீரத்தைக் கொண்டே நீரிழிவு நோய்க்கான இன்சுலின் மருந்து தயாரிக்கப்படுகிறது. அவ்வாறே அம்மைப்பாலும், தொண்டை அடைப்பான் போன்றவற்றுக்கான மருந்தும் விலங்குகளின் சீரத்திலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

மற்றும் பல மருந்துகள் வேதியியல் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இவற்றுள் சல்ஃபா மருந்துகளும் உயிர்ச்சத்தாகிய வைட்டமின்களும் பெனிசிலின் மருந்துகளும் முக்கியமானவையாகும். பாதரசம் போன்றவற்றின் உறுதுணையோடு களிம்பு மருந்துகள் பல உருவாக்கப்படுகின்றன.

ஒரு சில மருந்துகள் நோயாளியின் உடலுக்கு ஒத்துக்கொள்வதில்லை. ஒவ்வாத அம்மருந்துகளை உட்கொண்டால் வேறு எதிர் விளைவுகள் ஏற்பட்டுவிடும். எனவே, இதை நன்கு அறிந்தே உணவை உட்கொண்டு நோயைப் போக்க முயலவேண்டும்.


மலேரியா : மனிதனுக்கு வரும் காய்ச்சல்களில் பலவகை உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப அவை பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒருவகைக் காய்ச்சல் மலேரியாக் காய்ச்சலாகும். காய்ச்சலோடு கடுங் குளிரும் உண்டாகும். அதுவும் விட்டு விட்டு வருவதால் இஃது 'முறைக்காய்ச்சல்’ என அழைக்கப்படுவதும் உண்டு.

மலேரியக் கொசு

இது ஒரு கடுமையான நோயாகும். மற்ற நோய்களைக் காட்டிலும் இதில் உயிரிழப்பு அதிகம். இந்நோய் மனிதர்களுக்கு மட்டுமின்றி குரங்குகளுக்கும் கால்நடைகட்கும் மற்றும் பறவை போன்ற பிற உயிரினங்களுக்கும் வருவதுண்டு.

மலேரியா நோய் கொசுக்களால் பரப்பப்படும் ஒருவகைத் தொற்று நோயாகும். ஒருவரி