பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மார்க்கோனி

237

குலைந்த மலைகளாகும். எரிமலை போன்ற வை திரட்சி மலைகளாகும். உருக்குலைந்த

மடிப்பு மலை

மலைகள் என்பவை பூமியின் புறணியில் ஏற்படும் உருக்குலைவு மாற்றங்களுக்கேற்ப வடிவெடுப்பவைகளாகும். இவை இரு வகையினவாகும். ஒன்று பெயர்ச்சி மலை, மற்றொன்று மடிப்பு மலை ஆகும். உலகில் உள்ள மாபெரும் மலைகள் அனைத்தும் மடிப்பு மலைகளேயாகும். இமய மலையும் மடிப்பு மலைகளேயாகும்.

மலையேறுதல்

தேய்வு மலை என்பவை முன்னொரு காலத்தில் உயர்ந்த பீடபூமிகளாக இருந்து பின்னர் காலப்போக்கில் மழை நீரோட்ட அரிப்பினாலும் காற்றாலும், தேய்ந்து உயரம் குறைந்த மலைகளாகவும் மலைத் தொடர்களாகவும் நிற்பவைகளாகும்.


மக்னீசியம் : இது ஒருவகை உலோகமாகும். இதன் பயன்பாட்டை இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்பிருந்தே எகிப்தியரும் ரோமரும் அறிந்து அதைப் பயன்படுத்தியிருப்பதை ஆவணங்களும் பழைய கருவிகளும் புலப்படுத்துகின்றன.

இது ஒரு சிறந்த ஒடுக்கியாகவும் பயன்படுகிறது. உலோகவியலில் உலோகங்களோடு கலந்திருக்கும் எஞ்சிய ஆக்சிஜனை நீக்கவும் பயன் படுகிறது. ஒளிச்சேர்க்கைக்குப் பெரிதும் பயன்படும் குளோரபிள் எனும் தாவரத்தில் காணப்படும் பச்சையம் ஒரு மக்னீசிய அணைவுச் சேர்மமாகும்.

ஆசியா மைனரில் மக்னீசியா எனும் கிராமத்தில் இவ்வுலோகம் கிடைத்ததால் இஃது மக்னிசியம் எனும் பெயரைப் பெற்றது.

1870இல் ஜான் என்பவர் தூய மக்னீசியம் உலோகத்தை அதன் தாதுக்களிடமிருந்து பிரித்தெடுத்தார்.

இரும்புடன் மக்னீசிய உலோகத்தைக் கலந்து கலப்பு உலோகம் தயாரிக்கின்றனர். காரணம், மக்னிசியம் கலப்போடு தயாரிக்கப்படும் எஃகு உறுதி மிக்கதாகவும் மீள் திறமுடையதாகவும் அமைகிறது. சிறந்த தொற்று நீக்கியான பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை மக்னிசியமுடன் பொட்டாசியம், ஆக்சிஜன் கலந்து தயாரிக்கப்படுகிறது. வண்ணப்பூச்சுலும் வார்னிசுகளிலும் உயர்த்தியாகப் பயன்படும். மக்னீசிய டையாக்சைடு இதைக் கொண்டு தயாரிக்கப்பட்டதேயாகும்.

இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மக்னிசிய உலோகம் அதிக அளவில் கிடைக்கிறது.

தூய மக்னீசியம் ஓரளவு கடினமான, அதே சமயம் நொறுங்கும் தன்மையும் கொண்டது. இது சிறிது சிவப்புக் கலந்த சாம்பல் நிற உலோகமாகும்.

ஸ்பீசல் (Spiesel) எனப்படும் கரி, மக்னிசியக் கலவை எஃகுத் தயாரிப்பில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்றும் எஃகில் மக்னீசிய விகிதம் அதிகரிக்கும்பொழுது அதன் கடினத்தன்மையும் அதிகரிக்கும்.


மார்க்கோனி செய்திப் போக்குவரத்துத் துறையில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட கம்பியில்லாத் தந்திமுறையைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை மார்க்கோனியாவார். நமது