பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

மிதவை உயிரினங்கள்

வீட்டில் உள்ள ரேடியோ எனும் வானொலிப் பெட்டியை முதலில் வடிவமைத்தவர் இவரே. 1874ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள பொலோன எனுமிடத்தில் பிறந்த இவர் இளமை தொட்டே அறிவுக் கூர்மை மிக்கவராகவும்

மார்க்கோனி

ஆராய்ச்சி மனப்பான்மையுடையவராகவும் விளங்கினார். இவர் பள்ளி சென்று பிறரைப்போன்று கல்வி கற்றவர் அல்லர். விட்டிலேயே ஆசிரியரைக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டவர்.

தந்திக் கருவியுடன் மார்க்கோனி

புதியன புனையும் பெருவிருப்புடைய இவர், இளம் பிராயம் முதலே தன் வீட்டிலேயே ஆய்வுக்கூடம் அமைத்து ஆராய்ச்சி செய்து வந்தார். தமது இருபத்தைந்தாவது வயதில் மின் அலை மூலம் செய்திக் குறியீடுகளை அனுப்புவதில் பெரு வெற்றி கண்டார். அதன் பயனாக உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்பே கம்பியில்லாத் தந்தி முறை. இதற்காக 1909 -ஆம் ஆண்டில் இயற்பியலில் நோபல் பரிசைப் பெற்றார்.

இவர் 1912ஆம் ஆண்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கித் தன் பார்வையை இழந்தார். இருப்பினும் திறன் குன்றாதவராகப் பணிபுரிந்தார். இரண்டாம் உலகப் போரின்போது கம்பியில்லாத் தந்தித்துறைத் தலைவராகப் பணி புரிந்தார் . 1919இல் பாரிசில் நடைபெற்ற உலக சமாதான மாநாட்டில் இத்தாலியப் பிரதிநிதியாகப் பங்கு கொண்டார். 1987இல் தமது 68ஆம் வயதில் மறைவெய்தினார்.


மிதவை உயிரினங்கள் : நீரின் மேற்பரப்பில் மிதந்தபடி அலைந்து வாழும் உயிரினங்கள் 'மிதவை உயிரினங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. நீர் வாழ் உயிரினங்களில் மிக அதிக அளவில் மிதவை உயிரினங்களே உள்ளன என உயிரியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மிதவை உயிர்கள் கடல் நீர், உவர் நீர், நன்னீர் ஆகிய எல்லா நீர் நிலைகளிலும் வாழ்கின்றன.

மிதவை உயிரினங்கள் இருவகையினவாக உள்ளன. முதலாவது நீர் மட்டத் தாவர உயிரினங்கள். இம்மிதவைத் தாவரங்கள் நீர் மட்டத்திற்குச் சற்று கீழாக வேர் பரப்பியும் மற்ற பகுதிகள் நீருக்கு மேலிருக்குமாறும் அமைந்து வாழ்கின்றன. அதற்கு ஏற்றவாறு அவற்றின் அமைப்புகள் உள்ளன. இம் மிதவைத் தாவரங்கள் பெரும்பாலும் பச்சை நிறமுடையனவாகவே உள்ளன. இவை நீரில் கரைந்துள்ள உப்புக்களையும் கரியமிலவாயுவையும் ஈர்த்து உண்டு வாழ்கின்றன. நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் பகுதி சூரியக்கதிர்களின் துணைகொண்டு அவற்றிற்கு வேண்டிய உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. இவை கண்ணுக்குத் தெரி-