பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

மின்காந்தம்

இஃது அவர் பெயராலேயே அழைக்கப்படலாயிற்று.

வோல்ட்டா மின்கலம்

வோல்ட்டா மின் கலத்தில் கண்ணாடிப் பாத்திர மொன்றில் நீர்த்த கந்தகமிலம் நிரப்பப்பட்டு அதில் ஒருபுறம் செப்புத் தகடும் மறுபுறம் துத்தநாகத் தகடும் வைக்கப்பட்டிருக்கும். இவற்றின் வெளி முனைகளை செப்புக் கம்பிகளால் இணைத்து, அவ் விணைப்புப் பகுதியில் ஒரு மின் விளக்கை வைத்தால் விளக்கு எரிவதைக் காணலாம். இதுவே வோல்ட்டா மின்கல அமைப்பாகும்.

இதே போன்ற முறையில் அமைந்து செயல்படுவதே 'பேட்டரி லைட்' எனும் கை விளக்கில் உள்ள பசை மின்கலங்கள். இதில் வேதிப்

பசை மின்கலம்

பொருள்கள் திரவ வடிவில் இல்லாது ஒரு வகைக் கெட்டிப்பசை வடிவில் வைக்கப்பட்டிருக்கும். வோல்ட்டா மின் கலத்தில் உள்ள திரவப் பொருளை குறிப்பிட்ட காலத்திற்குப்பின் மீண்டும் மின் விசை பெற மாற்ற வேண்டும். ஆனால் பசை மின்கலத்தில் மின்சக்தி குறையும்போது பசை மின்கலத்தைப் பயனற்றவையாக எரிந்துவிட வேண்டியிருக்கும்.

இரண்டாவது வகை மின்கலங்கள் துணை மின் கலங்கள் என அழைக்கப்படுகின்றன. இதற்குரிய எடுத்துக்காட்டாக மோட்டார் காரில் பயன்படுத்தப்படும் மின்கலத்தைக் கூறலாம். இதைச் சேமக்கலம் எனவும் கூறுவர். இதில் மின் உற்பத்தித் திறன் குறையும்போது மீண்டும் அதனுள் மின்சக்தியை வெளியிலிருந்து பாய்ச்சினால் அதில் உள்ள வேதிப் பொருட்கள் வினைப்பட்டு மீண்டும் மின்சக்தியை உருவாக்கும் திறனைப் பெறுகின்றன.

இவ்வாறு மின்னேற்றம் (Charging) பெறுவதால் இம் மின் கலம் பழைய நிலையை அடைந்து மின் சக்தி தரப் பயன்படுகினறது. இவ்வகையான சேமக்கலங்களே தந்தி, தொலைபேசி நிலையங்களிலும், ரயில், கப்பல், விமானம் மற்றும் கார் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் இவற்றிலிருந்து அதிக அளவில் மின்சக்தி பெற இயலாது. குறைந்த அளவு மின் சக்தியே கிடைக்க இயலும், சாதாரணமாகப் பசை மின்கலம் ஒன்றில் 1.50 வோல்ட் மின் அழுத்தம் கிடைக்க இயலும். இவற்றில் பலவற்றைத் தொடரிணைப்பில் இணைத்துப் பயன்படுத்தும் போது எத்தனை பசை மின்கலம் இணைக்கப் பட்டுள்ளதோ அதன் எண்ணிக்கைக்கேற்ப அதிக மடங்கு மின்சக்தி பெற இயலும்.

சேமக்கலம்

டிரான்சிஸ்டர், வானொலிப் பெட்டிகளுக்கு நான்கு அல்லது ஆறு பசை மின்கலங்கள் பயன்படுத்தப்படுகின்றன . கார்களில் 12 வோல்ட் மின் அழுத்தம் தரும் மின் சேமக் கலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


மின்காந்தம் : "எலெக்ரோ மாக்னெட்’ என அழைக்கப்படும் மின்காந்தம் தன் காந்த சக்தியை இழந்துவிடும். சாதாரணமாக இரும்புத் துண்டு ஒன்றில் மின் கம்பிகளைச் சுற்றி மின் னோட்டம் செலுத்தும்போது இரும்புத் துண்டு காந்த சக்தியைப் பெறும்.

எஃகு, வார்ப்பிரும்பு, தேனிரும்பு என இரும்புகளில் பலவகை இருந்தபோதிலும் மின்காந்த முண்டாக்கத் தேனிரும்புத் துண்டுகளே பயன்படுத்தப்படுகின்றன. காந்தத்திற்கு இருப்பதுபோலவே மின்காந்தத்திற்கும் வட முனை, தென்முனை என இரு முனைகள் உண்டு. இதைக் காந்த ஊசி கொண்டு அறியலாம். மின்காந்தத்தை எந்த அளவிலும் வடிவிலும் பெற இயலும்.