பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்சாரம்

241

மின்காந்தத் தத்துவத்தை 1825ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறிந்து கூறியவர்

மின்காந்தம்

வில்லியம் ஸ்ட்டர்ஜன் எனும் ஆங்கிலேயர் ஆவார். அதன்பின் 1820இல் ஆர்ஸ்டெட்

மின் அழைப்பு மணி

எனும் டேனிஸ் அறிஞர் காந்தத்தின் விளைவுகளைக் கண்டறிந்து கூறினார்.

காந்தத்தை உருவாக்க அதிக நேரம் செலவாகும். ஆனால், மின்காந்தத்தை எண்ணிய மாத்திரத்தில் பெற முடியும். மின்காந்தத்தை தேவைக்கேற்ப சிறிய அளவிலோ பெரிய அளவிலோ உற்பத்தி செய்துகொள்ள முடியும். சான்றாக, மின் அழைப்பு மணிக்கு மிகக் குறைந்த அளவு மின் காந்த சக்தி போதும், அதைவிட சற்று அதிக அளவு மின்காந்த சக்தி தந்தி, டெலிபோன் இயங்கத் தேவைப்படும். தொழிற்சாலைகளில் பல டன் நிறையுள்ள பொருட்களைத் தூக்குவதற்கும் இரும்பு. தொழிற்சாலைகளில் இரும்புப் பொருட்களைத் தூக்குவதற்கும் ஆற்றல் மிக்க மின் காந்தங்கள் தேவைப்படும்


மின்சாரம் : ‘எலெக்ட்ரிசிட்டி” என்று கூறப்படும் மின்சாரம் இல்லையேல் இன்றைய நவீன வாழ்வும் இல்லை என்ற அளவுக்கு இன்றைய வாழ்வில் முக்கியத்துவம் பெற்று விளங்குவது மின்சாரமாகும். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருவது மின்சாரம் என்று கூடக் கூறலாம்.

பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவைகளாகும். அணுவானது பிரிக்க முடியாத மிக நுண்ணிய பகுதியாகும். ஒவ்வொரு அணுவும் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எனும் மூன்று விதமான துகள்களைக்கொண்டு அமைந்ததாகும். மின் கடத்தும் பொருள்களில் உள்ள அணுக்கள் தங்களிடமிருந்து ஒரு சில எலெக்ட்ரான்களை இழந்து அயனிகளாக நகர முடியாமல் வரிசையாக முப்பரிமாணத்தில் அணி வகுத்து இருக்கும். அணுவிலிருந்து விடுபட்ட எலெக்ட்ரான்களைக் கட்டற்ற எலெக்ட்ரான்கள் என்கிறோம். இவை கடத்திகளில் தன்னிச்சையாக அலைய முடியும். எனினும், ஒரு குறிப்பிட்ட திசையில் செல்லாமல், பல திசைகளிலும் செல்வதால் அதனுடையவேகம் ஒரு குறிப்பிட்ட திசையில் சுழியாகும். ஒரு மின் அழுத்த வேறுபாட்டில், ஒரு மின்கடத்தி இருக்கும்போது, கட்டற்ற எலெட்க்ரான்கள் இங்கும்.அங்கும் இயங்கிக்கொண்டிருந்தாலும் செலுத்தப்பட்ட மின்புலத்திற்கு எதிர்த்திசையில் கொஞ்சங் கொஞ்சமாக நகரும், இதை நாம் மின்னோட்டம் என்கிறோம்.

இவ்வாறு நகரும் எலெக்ட்ரான் ஒரே போக்கில் நகருமேயானால் அதனை நேர் மின்னோட்டம் என்பர். முன்னும் பின்னுமாக மாறி மாறி நகர்ந்தால் அதை மாறு மின்னோட்டம் என்பர். இவ்விருவகை மின்னோட்டமும் வெவ்வேறு வகைகளில் சிறப்புடையனவாக விளங்குகின்றன. வேதியியல் விளைவு நிகழ்த்த நேர்மின்னோட்டம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மின்சக்தியை விரயமின்றிக் கொண்டு செல்ல மாறு மின்னோட்டமே சிறந்ததாகும்.

16