பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதுகெலும்புள்ள உயிரினங்கள்

247

டிரண்டாய் பிரிந்து தனித்தனி உயிர்களாகப் பெருக்கமடைகின்றன. புரோட்டோசோவா உயிரினங்களில் முப்பதினாயிரம் வகைகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

முதுகெலும்பில்லா உயிரினங்களில் மற்றோர் வகை பவளப் பூச்சிகள், கடல் சாமந்தி,

முதுகெலும்பில்லா உயிரினங்கள்

ஜெல்லிமீன் போன்றவைகளாகும். நாடாப் புழு, ஈரல் புழு போன்றவை தட்டைப்புழுக்கள் எனும் வேறோர் வகையைச் சார்ந்தனவாகும். கொக்கிப்புழு, நாக்குப்பூச்சி, நரம்புச் சிலந்திப் புழு போன்றவை உருண்டைப்புழு எனும் மற்றோர் வகையைச் சார்ந்தவையாகும். வளையங்களாலான உடலமைப்பைக் கொண்ட மண்புழு, அட்டை போன்றவை வளையப் புழுக்கள் எனும் வகையைச் சார்ந்தனவாகும். மற்றும் கிளிஞ்சல், நத்தை போன்றவை கண்ணாம்புப் பொருளால் மூடப்பட்ட மெல்லுடலிகளாகும். அக்டோபஸ் எனும் எண்காலிகள் போன்றவையும் இத்தகையனவே. நட்சத்திர மீன், கடல் வெள்ளரி போன்ற கடல்வாழ் உயிரினங்களும் முதுகெலும்பில்லாதவைகளேயாகும். முதுகெலும்பில்லாத உயிரினங்களில் அளவால் மிகப் பெரியவைகளாக கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, வண்டு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

முதுகெலும்பில்லா உயிரினங்களில் நன்மை தருவனவும் தீமையைப் பயப்பனவும் உண்டு. பட்டுப்பூச்சி, தேனீ, அரக்குப் பூச்சி போன்றவை நன்மை செய்வனவாகும். மற்றவை ஏதேனும் ஒரு வகையில் மனிதருக்குத் தீங்கிழைப்பவைகளாகவே உள்ளன.


முதுகெலும்புள்ள உயிரினங்கள் : இவை முதுகுத்தண்டை அடிப்படையாகக் கொண்ட முதுகெலும்புகளையுடைய உயிரினங்களாகும். இவைகளின் முதுகெலும்புகளே இவற்றின் உடலைத் தாங்கும் சட்டகமாகப் பயன்பட்டு வருகின்றன.

தண்டுவடத்தினுள்ளே நீண்ட நரம்புவடம் ஒன்று உண்டு. இதுவே முதுகெலும்பின் இன்றியமையா முக்கியப் பகுதி. இந்நரம்பு வடம் மூளைப் பகுதியுடன இணைக்கப்பட்டுள்ளது. மூளைப் பாதுகாப்புக்கு மண்டையோடு அமைந்திருப்பது போன்று நரம்பு வடத்தின் பாதுகாப்புக் கேடயமாக முதுகெலும்பு அமைந்துள்ளது. பெரும்பாலான முதுகெலும்புள்ள உயிரினங்களில் இரு துணையுறுப்புகள் உண்டு. இவை ஒன்றுக்கொன்று இணையாக இல்லை. அவ்வாறு அமைந்த துணை உறுப்புக்களே மனிதனுக்குள்ள இரு கைகள், பறவைகளுக்குள்ள இரு இறக்கைகள்; மீன்களுக்குள்ள துடுப்புகள்; ஊர்வன, நடப்பன ஆகியவற்றுக்குள்ள முன்னங்கால்களும் பின்னங்கால்களும்.

முதுகெலும்புள்ள உயிரினங்களில் எழுபதாயிரம் வகைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஐந்து பெரும் தொகுப்புகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை நீரில்