பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

மூளை

புறமும் பரவியுள்ள நுரையீரல் இணைக்கப்பட்டுள்ளது. இருபுற நுரையீரல்களிலும் எண்ணற்ற காற்றுச் சிற்றறைகள் உள்ளன. இச்சிற்றறைகளின் உட்புறத்தில் நுண்ணிய இரத்த தந்துகிகள் எனும் இரத்தக் குழாய்கள் ஏராளமாகப் பரவியுள்ளன. நாம் சுவாசிக்கும் காற்று துரையீரல் காற்றுச் சிற்றறைகளை நிரப்புகிறது. இக்காற்றிலுள்ள ஆக்சிஜனை இரத்தத் தந்துகிகள் கிரகிக்க இரத்தம் சுத்தப் படுகிறது. உடலெங்குமிருந்து தந்துகிகள் மூலம் வரும் அசுத்த இரத்தம் நுரையீரல் சிற்றறைகளை அடைய அங்கிருந்து கார்பன்டை-ஆக்சைடு கழிவுப் பொருளாக மூச்சுக் காற்றாக வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு நிமிடமொன்றுக்கு 18 முறை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுகிறோம்.

ஓடும்போதும் வேலை செய்யும்போதும் அதிக சக்தி தேவைப்படுகிறது. இதனால் உடல் உயிரணுக்களுக்கு அதிக ஆக்சிஜன் தர, வேகமாகச் சுவாசிக்க வேண்டியதாகிறது.

மனிதர்களைப் போன்றே மற்ற உயிரினங்களும் சுவாசிக்கின்றன. அவற்றிற்கு மூச்சுவிட தனி உறுப்புகள் உண்டு. ஓரணு உயிரான அமீபா நீரிலுள்ள ஆக்சிஜனை சுவாசித்து உயிர் வாழ்கிறது. மீன்கள் தங்கள் செவுள்கள் மூலம் ஆக்சிஜனைச் சுவாகிக்கிறது. தாவரங்கள் தங்கள் இலைகளிலுள்ள துவாரங்கள் மூலம் ஆக்சிஜனை வெளியிட்டு கார்பன்-டையாக்சைடைசுவாசிக்கின்றன, புழு, பூச்சிகளுக்கும் சுவாசம் தேவைப்படுகிறது. அவ்ற்றிற்கு அதற்கென தனி உறுப்பு உண்டு. ஆயினும், இவற்றிற்கு மூச்சை வெளியிட தனி உறுப்பு இல்லை.


மூளை : 'எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி. அந்தச் சிரசில் உள்ள மூளையே உடலின் மூலாதாரமாக அமைந்துள்ள பகுதி. கண், காது, வாய். மூக்கு, தொடுவுணர்வு ஆகிய ஐம்புலன்களின் செயல்பாடும் மூளையைப் பொறுத்தே அமைகிறது. மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவது மூளையேயாகும். மூளை இடும் கட்டளைக் கேற்பவே நம் உடல் செயல்படுகின்றது. அத்துடன் நம் கடந்த கால அனுபவ நிகழ்வுகளையும் நிகழ்காலச் செயல்பாடுகளையும் பதிவு செய்து கொண்டு நினைவுகளாக வெளிப்படுத்துவது மூளையே யாகும். தாம் வெளிப்படுத்தும்

மூளையின் மேற்தோற்றம்

இன்ப, துன்ப உணர்ச்சிகள் அனைத்துக்கும் தோற்றுவாயாக அமைந்திருப்பது நம் மூளையேயாகும். சராசரி மனிதனுக்கு

மூளையின் பின் பகுதி

மூளையின் எடை சுமார் 1,500 கிராம். இம்மூளை கெட்டியான மண்டையோட்டினுள் சவ்வு உறைகளால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படா வண்ணம், அதிர்வைத் தவிர்க்கும் வகையில்