பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மோட்டார் சைக்கிள்

255

இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பல லென்ஸ்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது கருவியில் அமைந்துள்ள குழாயின் இரு முனைகளில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் மேற்பகுதியிலுள்ளது கண்ணுக்கு அருகாக இருக்கும். மற்றவை ஆய்வுப் பொருளுக்கு அருகாக இருக்கும். ஆய்வுப் பொருளைத் தெளிவாகக் காணும் வகையில் லென்ஸ்கள் பொருத்தப்பட்ட குழாயை மேலும் கீழுமாகவோ அன்றி பக்கவாட்டிலோ எளிதாகத் திருப்பக்கூடிய அமைப்போடு இருக்கும். மேலும், பார்க்கும் ஆய்வுப் பொருள்மீது ஒளியை பிரதிபலிக்கக் கூடிய மற்றொரு ஆடி கீழே அமைந்திருக்கும். இந்தக்கூட்டு மைக்ராஸ்கோப் கருவி ஆய்வுப் பொருளைச் சுமார் 2,500 மடங்குப் பெரிதாக்கிக் காட்ட வல்லதாகும். இத்தகைய நுண் பெருக்கிக் கருவி முதன் முதலில் 1590-ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் கண்டறியப்பட்டது. அதன் பின் இக்கருவிபல்வேறு மாற்ற திருத்தங்களுக்கு உட்பட்டு இன்றைய நவீன வடிவைப் பெற்றுள்ளது.

மைக்ராஸ்கோப் கருவியால் கூடக் காண முடியாத மிக மிக நுண்ணிய பொருளைப் பெரிதாக்கிக் காணவும் ஆயவும் மின்னணு நுண்பெருக்கிக் கருவியாகிய 'எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்' கருவி தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நுண் பொருளை சுமார் இரண்டு இலட்சம் மடங்குப் பெரிதாக்கிக் காணமுடியும். இக்கருவியில் மைக்ராஸ்கோப்பில் உள்ளதுபோல் லென்ஸ்கள் ஏதும் இல்லை. மின்சாரக் காந்த மண்டலங்கள் இதில் லென்ஸ்கள் ஆற்றக் கூடிய பணியைச் செய்கின்றன. மின்னணுக் கற்றைகள் ஆய்வுப் பொருளை ஒளிரும் திரையில் வடிவு பெறச் செய்கின்றன. இவ்வடிவை ஒளிப்படமாகவும் எடுக்கவியலும்.

கூட்டு மைக்ராஸ்கோப் கருவியில் இரு கண்களாலும் பார்க்கும் வகையில் இரு கண் வில்லைகளும் இரு பொருள் வில்லைகளும் இருக்கும். இஃது, 'இணைப்பார்வை மைக்ராஸ்கோப்’ என்று அழைக்கப்படுகிறது.

இதேபோன்று உலோகத் தொழிலிலும் உலோகக் கலவைக் கூறுகளைக் கண்டறிய தனி மைக்ராஸ்கோப் உண்டு. இது உலோக மைக்ராஸ்கேரப் எனப்படுகிறது.


மோட்டார் சைக்கிள் : இது காலால் மிதித்துச் செலுத்தும் சாதாரண மிதிவண்டியைவிட பன்மடங்கு வேகமாக மோட்டார் விசையினால் இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்ட வாகனமாகும். இதில் முன் பின்னாக இரு சக்கரங்கள் உண்டு. இவற்றிற்கிடையே சிறு மோட்டார் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் பெட்ரோலை எரி பொருளாகக் கொண்டு விசையுடன் இயங்கும். என்ஜினுக்கு நேர் மேலாக ஒட்டுபவரின் இருக்கை உண்டு.

மோட்டார் சைக்கிள்

அதற்கு அடுத்து மற்றொருவர் உட்காருவதற்கும் இணைப்பு இருக்கை இருக்கும். மேலும் ஓரிருவர் அதிகமாக அதில் பயணம் செய்ய விரும்பினால் தனிச் சக்கரத்தோடு கூடிய இருக்கைப் பெட்டியை பக்கவாட்டில் இணைத்துக் கொள்வர்.

இதன் என்ஜினில் காற்றால் குளிரூட்டும் ஒன்றுமுதல் நான்குவரையில் சிலிண்டர் என்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும். சவாரியின்போது அதிர்ச்சி உண்டாகாவண்ணம் சுருள்வில் (Spring), கவை (Fork) போன்றவைகளால் அமைக்கப்பட்டுள்ளது. என்ஜினோடு அமைந்துள்ள சங்கிலி (Chain) பற்சக்கரத்தோடு இணைந்து சக்கரங்களைச் சுழலச் செய்கிறது. சங்கிலியும் பற்சக்கரமும் தூசி அடையாமல் இருக்கும் பொருட்டு தகரப் பெட்டியால் மூடப்பட்டுள்ளது.

ஆஸ்டின் என்பவரால் 1868இல் முதன் முதலில் நீராவியால் இயங்கும் மோட்டாரைக் கொண்டு மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்