பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

மோட்டார் வண்டிகள்

பட்டது. இதைக் கையாள்வதிலும் இயக்குவதிலும் பல சிரமங்கள் ஏற்பட்டன. அதன் பின் இன்றைய வடிவமைப்போடு கூடிய மோட்டார் சைக்கிள் 1900இல் தான் உருவாக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து மாற்றத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இன்று பல்வேறு வடிவினவாக உருப்பெற்றுள்ளன. இன்றைய மோட்டார்சைக்கிள் வசதி, வலிமை, வேகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையினவாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோலைக் கொண்டு 50 மைல் தூரத்திற்கு மேல் ஓடக் கூடிய மோட்டார் சைக்கிள்களும் உருவாக்கப் பட்டுள்ளன. அவைகளில் 100 மைல் வேகத்திற்குமேல் ஓடக்கூடிய மோட்டார் சைக்கிள்களும் உண்டு.

மோட்டார் சைக்கிளைவிட எளிய வாகனமாக அமைந்திருப்பது ஸ்கூட்டர் வாகனமாகும். இஃது இரண்டாம் உலகப் போரின் போது டி'அசானியே எனும் இத்தாலிய பொறியியல் வல்லுநரால் உருவாக்கப்பட்டது. குறைந்த அளவு பெட்ரோலில் அதிக தூரம் செல்லவல்லதாகும், பெண்கள் இயக்குவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. எனினும் எளிமை, சிக்கனம் கருதி ஆண்களும் இவ்வாகனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வகை வாகனங்கள் அனைத்தும் இன்று இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.


மோட்டார் படகு : தரையில் ஓடும் மோட்டார் வாகனங்களைப் போன்று இது நீரில் ஓடுகிறது. இதுவும் மோட்டார் இயந்திரங் கொண்டே இயங்குகிறது. நீர்வழிப் போக்குவரத்தில் மோட்டார் படகுகள் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

சாதாரணமாக மோட்டார் படகுகள் பெட்ரோல் அல்லது டீசல் எண்ணெயால் இயக்கப்படுகின்றன. மோட்டார்ப் படகுகளில் பலவகைகள் உண்டு. பொருள் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து, உல்லாசப்பயணம், படகுப்போட்டி போர்ப்படையினர் பயன்படுத்தும் மோட்டார் படகுகள் எனப் பலவகைகள் உள்ளன. அவற்றின் வடிவமைப்பும் இயங்கு திறனும் வேகமும் வேறுபடும். உல்லாசப் படகுகளில் வீட்டிலுள்ள முக்கிய வசதிகள் அனைத்தும் இருக்கும். படகுப் போட்டிகளில் பயன்படுத்தும் மோட்டார்கள் அதிக விசைத் திறனுடையதாகும். போர்ப்படைகளில் வீரர்களையும் போர்ச்சாதனங்களையும் விரைந்து கொண்டு செல்ல மோட்டார்ப் படகுகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. டார்பிடோ எனும் பீரங்கிப் படகுகள் கப்பல்களையே தாக்கி நாசப்படுத்தக்கூடிய அளவுக்கு வல்லமை கொண்டவைகளாகும். கப்பற் படையின் பேரங்கமாக மோட்டார் படகுகள் அமைந்துள்ளன. கார் போன்றே மோட்டார் படகையும் முன்னும் பின்னுமாகச் செலுத்த முடியும்.


மோட்டார் வண்டிகள் : தரைவழியில் நீண்ட தூரப் பயணத்தைச் சுகமாகச் செய்யு ஏற்ற வாகனமாக அமைந்திருப்பவை மோட்டார் வண்டிகளாகும்.

மோட்டார் வண்டியை முதன் முதலில் கண்டறிந்து வடிவமைத்தவர் நிக்ககோலஸ் ஜோசப் கியூநாட் என்ற ஃபிரெஞ்சுப் போர்ப் படைத் தளபதியாவார். 1769ஆம் ஆண்டில் போரின்போது பீரங்கி வண்டியை இழுத்துச் செல்ல நீராவியால் இயங்கும் தானியங்கி இயந்திர மொன்றை உருவாக்கிப் பயன்படுத்தினார். மூன்று மைல்துாரம் மட்டுமே அதனால் செல்ல

மோட்டார் வண்டி

இயன்றது. அதன்பின் நீராவி தீர்ந்து போகவே தொடர்ந்து பீரங்கி வண்டியை இழுத்துச் செல்ல இயலா நிலை. மீண்டும் புதியநீராவியை உருவாக்கிய பின்பே அது தொடர்ந்து மேற் செல்ல முடியும். இத்தகைய சிக்கல்களைத் தீர்த்து தொடர்ந்து மோட்டார் வண்டி இயங்க வழிவகை காண தொடர் முயற்சி மேற்கொண்