பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுரேனஸ்

257

டனர். ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, அமெரிக்க பொறியியல் அறிஞர்கள் இறுதியாக

கார் ஓட்டுநர் பகுதி

1880இல் பெட்ரோலால் இயங்கும் மோட்டாரைக் கொண்ட வண்டி உருவாக்கப்பட்டது.

பேருந்து

இத்தகைய மோட்டார் வண்டியை உருவாக்குவதில் பெரும்பங்கு கொண்டவர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆட்டோ, டெய்ம்லர், பென்ஸ் போன்றோராவர். இவர்களுள் பென்ஸ் என்பவர் 1887ஆம் ஆண்டில் வடிவமைத்த வாகனம் அனைவராலும் போற்றப்பட்டது.

மோட்டார் வண்டிச் சக்கரங்களுக்கான காற்றடைத்த சக்கரங்களை 1888இல் டன்லப் எனும் அமெரிக்கர் கண்டுபிடித்தார். இந்நவீன வசதிகளோடு கூடிய காரை உற்பத்தி செய்ய 1908ஆம் ஆண்டில் ஹென்றி ஃபோர்டு எனும் அமெரிக்கர் வழிவகை கண்டார். அதன் பின் ஏற்பட்ட தொடர் ஆய்வு முயற்சிகளின் விளைவாக செலவு குறைந்த, வசதிகள் நிறைந்த பலவகை வடிவில் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதன் வளர்ச்சிக்கு வேகமும் விறுவிறுப்பும் ஊட்டும் வகையில் உலகப் போர்கள் அமைந்தன. இன்று மோட்டார் வண்டிகளின் வடிவங்களில் மட்டுமல்லாது மோட்டார் எந்திர அமைப்பிலும் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காலத்திற்கேற்ற பற்பல நவீன வசதிகளும் காரில் உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை காற்றுப் பதனாக்கம் (Air Condition), வானொலி வசதி, தொலைக்காட்சி காணும் வாய்ப்பு அனைத்தும் இன்றைய மோட்டார் கார்களில் இடம்பெற்று சொகுசான பயணத்துக்கு வழிவகுத்துள்ளன.

மோட்டார் கார்களில் உள்ள என்ஜின் 'உள்ளெரி என்ஜின்’ என்று அழைக்கப்படுகிறது. இதிலுள்ள என்ஜின் பெட்ரோல் அல்லது டீசல் எண்ணெயுடன் காற்றைக் கலந்து எரியச் செய்து அதன்மூலம் உருவாகும் சக்தியைக் கொண்டு காரை ஓடச் செய்கிறது.

மோட்டார் வண்டிகளில் பல வகைகள் உள்ளன. தனியாகப் பயணம் செய்யும் சொகுசுக் கார்கள்; பலர் பயணம் செய்யக்கூடிய பஸ்கள்; பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகள்; ஜீப் எனும் சிறிய வாகனங்கள்; ஒரு சிலர் மட்டும் பயணம் செய்யக்கூடிய வேன்கள் எனப் பலவகைகள் உள்ளன. பந்தயக் கார்கள் தனி வடிவம் கொண்டவைகளாகும்.

எல்லா வகையான மோட்டார் வாகனங்களும் இப்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. வாகனங்களின் நடமாட்டத்தை முறைப்படுத்த வாகனச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே காரை ஓட்ட முடியும்.

பஸ், லாரி, வேன் போன்ற பெரும் வாகனங்கள் டீசல் எண்ணெயைக் கொண்டு இயக்கப்படுகின்றன. சிலவகைக் கார்களும் டீசலைக் கொண்டு இயக்கப்படுகின்றன. மற்றையக் கார்களும் சிறிய வாகனங்களும் பெட்ரோலால் இயக்கப்படுகின்றன. பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளாக சூரியச் சக்தியைக் கொண்டும் இயற்கை எரிவாயுவைக் கொண்டும் வாகனங்களை இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


யுரேனஸ் : பூமியைவிட நான்கு மடங்கு விட்டமுடைய யுரேனஸ் ஒரு கிரகமாகும். இது சூரிய மண்டலத்தில் உள்ளது. யுரேனஸ் கிரகத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் வில்லியம் ஹெர்சல் எனும் ஆங்கிலேய வானியல்

17