பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

யுரேனியம்

அறிஞராவார். சூரியனிலிருந்து சுமார் முன்னூறு கோடி கி.மீ. தொலைவிலிருக்கும் இக்கிரகம் சூரியப்பகுதியில் உள்ள ஏழாவது கிரகமாகும்.

யுரேனஸின் சுற்றுப் பாதை

யுரேனஸ் கிரகத்தைச் சாதாரணமாகக் கண்களால் காண இயலாது. தன்னைத்தானே 17 மணி 14 நிமிடங்களுக்கு ஒரு முறை சுற்றிக் கொள்ளும். இது சூரியனை ஒருமுறை சுற்றி வர 84 ஆண்டுகள் ஆகின்றது. இக்கிரகத்தில் உள்ள வாயுக்கள் ஹைட்ரஜனும் ஹீலியமுமாகும். இதன் வெப்ப நிலை சுமார் 2190 ஆகும்.

இக்கிரகத்தில் ஐந்து துணைக் கிரகங்கள் இருப்பதாக முன்பு கண்டறியப்பட்டிருந்தது. 1986ஆம் ஆண்டு வாயேஜர்-2 எனும் விண்வெளிக்கலம் யுரேனஸ் கிரகத்தை அடுத்துச் சென்றபோது, அதைச் சுற்றி மேலும் 10 துணைக் கிரகங்கள் இருப்பதைப் படம்பிடித்து அனுப்பியது. இதன் அடர்த்தி வியாழன் கிரகத்திலுள்ள அடர்த்தியை ஒத்ததாகும்.


யுரேனியம் : மற்ற உலோகங்களைவிட மிக முக்கியத்துவமுடைய உலோகமாகக் கருதப்படுவது யுரேனியமாகும். இவ்வுலோகத்தை முதன்முதலில் 1789ஆம் ஆண்டில் கண்டறிந்தவர் கிளாப்ரோத் எனும் ஜெர்மானிய அறிவியலறிஞர் ஆவார். இவர் யுரேனியத்தின் தன்மைகளை முழுமையாக அறிந்திருக்கவில்லை. யுரேனியம் கதிர்வீச்சுப் பண்புடைய உலோகம் என்பதை ஆய்வுபூர்வமாக 1896இல் உலகுக்கு கண்டறிந்து கூறியவர் பெக்கரல் எனும் ஃபிரெஞ்சு விஞ்ஞானியாவார். யுரேனியத்திலிருந்து வெளிப்படும் ரேடியக் கதிர்கள் மிக முக்கியத்துவமுடையதாகும். அணுசக்திக்கு யுரேனியம் இன்றியமையாப் பொருளாகும்.

யுரேனியம் இயற்கையில் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. மற்ற உலோகங்களோடு கலந்தே கிடைக்கிறது. எனவே, இதை மற்ற உலோகங்களிலிருந்து தனியே பிரித்தெடுத்துப் பயன்படுத்துகிறார்கள். யுரேனியம் பல்வேறு கனிமங்களோடு கலந்துள்ள போதிலும் கருநிறக் கனிமமான பிட்ச்பிளெண்டு எனும் கனிமத்திலிருந்தே அதிக அளவு பிரித்தெடுக்கப்படுகிறது. பிளெண்டு கனிமத்தில் யுரேனியம் மட்டுமல்லாது இரும்பு. காரீயம், செம்பு, வெள்ளி, கந்தகம் முதலியனவும் கலந்துள்ளன. யுரேனிய தாதுக்கள் அமெரிக்கா, கனடா, தென்னாஃப்ரிக்கா, காங்கோ, செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் பீகார் மாநிலத்திலும் கர்நாடகம், ஆந்திரம், கேரள மாநிலங்களிலும் கிடைக்கிறது.

பிரித்தெடுக்கப்பட்ட யுரேனியம் வெள்ளியைப் போன்று பளபளப்புடன் தோன்றும் . கனமான இவ்வுலோகத்தை கம்பியாகவும் தகடாகவும் செய்ய முடியும். இதன் உருகு நிலை 1850 ஆகும். யுரேனியத்திலிருந்து அணுசக்தி வெளிப்படுவதால் இஃது மிக முக்கியத்துவமுடைய உலோகமாகக் கருதப் படுகிறது.

நிறை எண் 285 உடைய யுரேனியம் ஐஸோடோப் அணுக்கரு பிளப்பு வினையில் பயன்