பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

ராடார்

1889ஆம் ஆண்டில் ரப்பரோடு கந்தகத்தைக் கலந்து வெப்பமூட்டினால் கடினத் தன்மை மிக்கதாக ஆக்க முடியும் என்பதைக் சார்லஸ் குட் இயர் என்பார் கண்டறிந்தார். இந்த ரப்பர் உறுதியாக இருந்தது. இதன் பிறகுதான் தொழில் துறையிலும் போக்குவரத்துத் துறையிலும் ரப்பரின் உபயோகம் அதிகரித்தது. இதன் மூலம் ரப்பர் தொழிலும் வெகுவாக வளர்த்தது.

ரப்பர் மரங்கள் பூமத்தியரேகையை அடுத்துள்ள ஆயிரம் கி.மீ. பகுதிகளிலேயே வளர்கின்றன. ஏனெனில், ரப்பர் மரங்கள் நன்கு செழித்து வளர நல்ல வெப்பம் தேவை. அத்துடன் ஈரப்பதமான சீதோஷ்ண நிலையும். நல்ல வளமான மண்ணும் அவசியம்.

ரப்பர் பால் வெளிப்படுதல்

ஆரம்பத்தில் ரப்பர் மரங்கள் தென் அமெரிக்காவில் பிரேசில், அமேசான் ஆற்றுப் பகுதிகளிலேயே வளர்ந்து வந்தன. பிற்காலத்தில் அங்கிருந்து ரப்பர் விதைகள் இங்கிலாந்து நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு பயிரிடப்பட்டது. அங்கிருந்துதான் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, பர்மா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு பயிரிடப்பட்டன. இந்நாடுகளே இன்றும் அதிக அளவில் ரப்பர் விளைவிக்கும் நாடுகளாக விளங்கி வருகின்றன. சாதாரணமாக, இருநூறு ஆண்டுகள்வரை வாழக்கூடிய ரப்பர் மரம் 18 முதல் 80 மீட்டர் உயரம்வரை செழித்து வளரும்.

ரப்பர் மரத்தின் அடிப்பகுதியை நன்கு கீறி விடுவார்கள். அங்கிருந்து வடிந்துவரும் ரப்பர் பாலை அருகே செறுகப்பட்டுள்ள கிண்ணங்களில் சேகரித்து பின் அவற்றைத் தொட்டிகளில் கொட்டுவர். அதோடு அமிலத்தைக் கலந்து ரப்பரைத் தனியேபிரித்தெடுப்பார்கள்.

நீர் பிரிக்கப்பட்ட ரப்பரை உலர்த்திச் சேகரிப்பர். அதன்பின் வேதியியல் பொருள்களைக்கலந்து பல்வேறு பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கின்றனர்.

வாகனச் சக்கரங்களுக்கான டயர்கள், பெருமளவில் ரப்பரால் தயாரிக்கப்படுகின்றன. ரப்பர் மின்சாரத்தைக் கடத்தாததால் மின்காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மெத்தை, தலையணை முதல் பலூன், கையுறைவரை இன்று ரப்பரால் உருவாக்கப்படுகின்றன.

ரப்பர் விளைவைவிடத் தேவை அதிகமாக இருப்பதால் இன்று செயற்கை ரப்பரும் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று டயர், டியூப் முதல் காலணி, மழைக்கோட்டு வரை அனைத்துப் பொருட்களும் செயற்கை ரப்பரைக் கொண்டே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நியோபிரின் பியூனா-N, பியூனா-S மற்றும் GRS போன்றவை செயற்கை ரப்பர்களாகும்.


ராடார் : ராடார் (Radar) என்னும்சொல் (Radio Detection and Ranging) என்ற ஆங்கில எழுத்துக் கூட்டுச் சொல்லின் ஒலி பெயர்ப்பாகும். இதற்கு 'பொருளின் இடத்தையும் தூரத்தையும் ரேடியோ அலைகளைக் கொண்டு அறிதல்’ என்பது பொருளாகும்.

மின்காந்த அலைகளான ரேடியோ அலைகள் ஏதாவது ஒரு பொருள் மீது பட்டுப் பிரதி