பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

ரேடியம்

நகரங்களில் தரை வழிப் போக்குவரத்து அதிகரித்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

நவீன ரயில்வண்டி

அதைச் சமாளிக்கப் பல நாடுகளில் பூமிக்கு அடியில் தரையடி ரெயில் பாதைகள்

தயராகவுள்ள புதிய ரெயில் பெட்டிகள்

அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அத்தகைய தரையடி ரெயில்பாதை கல்கத்தா நகரில் அமைக்கப்பட்டுள்ளது. சில நகரங்களில் தரைக்கு மேலாக மேம்பால ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய மேம்பால ரெயில்பாதை சென்னை நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

சமதளப் பாதையில் செல்லும் ரெயில்களைப் போன்றே மலைப் பாதையில் செல்லும் ரெயில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ள. ஆனால், மலை ரெயில் பாதை தரை ரெயில் பாதையைவிட சில விஷயங்களில் மாறுபட்டிருக்கும். முதலாவது மலையில் உயரமாக ஏறும்போது சக்கரங்கள் வழுக்கி விடாமல் இருக்க தண்டவாளங் களுக்கு இடையே பற்களோடு கூடிய மூன்றாவது தண்டவாளம் நடுவாக அமைக்கப் படுகிறது. மலை ரெயில்கள் கூடியவரை பளு குறைந்தனவாக அமைக்கப்படுகின்றன. பளு குறைந்த என்ஜினோடு ஒரு சில பெட்டிகளே இணைக்கப் படுகின்றன. மலை ரெயில் என்ஜின்கள் பின்புறமிருந்து இணைப்புப்பெட்டிகளை மேல் நோக்கித் தள்ளிச் செல்லும்,

இந்தியாவில் சித்தரஞ்சன் ரெயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலையில் எல்லாவகை என்ஜின்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. காசியில் உள்ள ரெயில் என்ஜின் தொழிற்சாலையில் டீசல் மின்சார என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சென்னையில் உள்ள ரெயில் பெட்டித் தொழிற் சாலை எல்லாவகை ரெயில் பெட்டிகளையும் தயாரிக்கின்றது.


ரேடியம் : மருத்துவத்துறைக்குப் பயன்பட்டுவரும் உலோகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று ரேடியம் எனும் உலோகமாகும். இவ்வுலோகத்திற்குத் கதிரியக்கத் தன்மை உண்டு என்பதை 1898ஆம் ஆண்டில் கண்டுபிடித்தவர்கள் கியூரி தம்பதியினராவர்.

ரேடியம் இயற்கையில் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. நூற்றுக்கு மேற்பட்ட உலோகங்களில் ரேடியம் கலந்துள்ளது. குறிப்பாக யுரேனியம் அடங்கிய தாதுப் பொருட்களிலிருந்து ரேடியம் பிரித்தெடுக்கப்படுகிறது. அவற்றுள் யுரேனியத் தாதுக்கள், கார்னோ