பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லென்ஸ்

265

டைட், டார்பனைட் போன்றவை முக்கிய யுரேனியப் பொருட்களாகும். ரேடியத்தைப் பிரித்தெடுப்பது மிகக் கடினமாகும். அளவும் குறைவேயாகும். ஒரு டன் தாதுவிலிருந்து அதிகபட்சமாக 218.மி./கிராம் ரேடியம் மட்டுமே பிரித்தெடுக்க முடியும். பிரித்தெடுக்கப்பட்ட ரேடியம் வெள்ளி போன்று பளபளப்பாகத் தோற்றமளிக்கும். இதனை 7000 வெப்பநிலையால் மட்டுமே உருக்கவியலும்.

ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் உடலின் சதையையும் எலும்பையும் எளிதாக ஊடுருவி தீங்கு விளைவிக்க வல்லதாகும். எனவே, கதிரியக்கத் தன்மை வாய்ந்த ரேடியத்தை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். இல்லையெனில் உடலுக்கு மிகுந்த ஊறு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இதனாலேயே இதை எப்போதும் கண்ணாடிக்குழாய்களில் அடைத்து கனமான ஈயப் பெட்டிகளுக்குள் வைத்துப் பாதுகாத்துப் பயன்படுத்துகிறார்கள்.

பிற துறைகளைவிட மருத்துவத்துறைக்கே ரேடியம் பெரும் பயன் அளிக்கிறது. புற்று நோய் சிகிச்சைக்கு ரேடியம் தலைசிறந்த பொருளாகப் பயன்பட்டு வருகிறது. வண்ணப் பூச்சுகளுக்கு ஓரளவு பயன்படுவதோடு வேதியியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படக் கூடியதாக உள்ளது.


லிஸ்ட்டர் : அறுவை மருத்துவத்துறையில் அருஞ்சாதனை செய்து, அதன் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு நூறு ஆண்டுகட்கு

லிஸ்டர்

முன்பே வழியமைத்வர் லிஸ்ட்டராவார். இவரது முழுப் பெயர் ஜோசப் லிஸ்டர் பிரபு என்பதாகும். இவர் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள அப்ட்டன் என்னும் ஊரில் பிறந்தார், லிஸ்டர் லண்டன் மருத்துலக் கல்லூரியில் பயின்று மருத்துவரானார். பின்னர் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மருத்துவத்துறையில் கிருமிநாசினியான நச்சுக் கொல்லிகளைப் பயன்படுத்தி, அறுவை மருத்துவத்தில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட பெருமைக்குரியவர் ஆவார். இவர் எடின்பரோவில் மருத்துவராகப் பணியாற்றியபோது அறுவை மருத்துவம் செய்து கொண்ட பலர், அறுவை செய்து கொண்ட இடத்தில் சீழ் பிடித்து மடிவதைக் கண்டு பெரிதும் வருந்தினார். இதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய இரவு பகலாக முயன்றார். இச் சமயத்தில் ஃபிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி பாஸ்டர் நொதித்தல் குறித்து வெளிவந்திருந்த ஆய்வு முடிவு இவரது ஆராய்ச்சிக்கு அடிப்படையாயிற்று. பாக்டீரியாக்களைப் பழச்சாறு நொதிப்பு அடைவதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தபோது அறுவை செய்து கொண்ட இடத்தில் கிருமிகள் உட்புகுவதால் சீழ் பிடிக்கிறது. இரத்தத்தில் நஞ்சேறுகிறது. இதனால் இறப்பு ஏற்படுகிறது என்று கண்டறிந்தார். இத்தகைய நுண் கிருமிகளைக் கொல்லும் கார்பாலிக் அமிலத்தைக் கண்டுபிடித்தார். அறுவை மருத்துவம் தொடங்குமுன் அறுவை செய்யும் மருத்துவரின் கைகள், அறுவைக்கான கருவிகள், அறுவைக்குப் பின் அப்பகுதியில் வைத்துக் கட்டும் பஞ்சு ஆகியவை கிருமிகளின்றி இருக்கும் பொருட்டு அவற்றின்மீது நச்சுக் கொல்லியாகிய கார்பாலிக் அமிலத்தைப் பயன்படுத்தும் புது முறையைக் கையாண்டார். இதனால் அறுவை மருத்துவம் செய்து கொண்டவர்கள் சீழ் பிடித்தல் போன்ற தொல்லைகளின்றி உயிர் பிழைக்க ஏதுவாயிற்று. இதற்கேற்ப அறுவை மருத்துவக் கருவிகளையும் வடிவமைத்துத் தந்தார். இதனால் அறுவை மருத்துவத்துறை அளவிட முடியா பெரு நன்மை பெற்றது. அறுவை மருத்துவ உலகில் இவர் பெயர் அழியா முத்திரையாக அமைந்தது.

இவர் ராயல் சொசைட்டியின் தலைவராகவும் மற்றும் பல அறிவியல் ஆய்வுக் கழகங்களின் தலைவராகவும் திகழ்ந்தார்.


லென்ஸ் : ஒரு பக்கமோ அல்லது இரு பக்க வளைவான பரப்போடு கூடிய ஒளிபுகும் சாதனமே லென்ஸ் அல்லது வில்லை என்று அழைக்கப்படுகிறது. இது கண்ணாடியாகவோ அல்லது பிளாஸ்டிக்காகவோ ஆனதாக இருக்கலாம். பார்வைக் குறைவுடையவர் தெளிவான பார்வை பெற அணியும் கண்ணாடி லென்சால் ஆனதேயாகும். லென்சின் ஏதாவது ஒரு பகுதி வளைவாக இருக்கும்.

சாதாரணமாக லென்சுகளை ஆறு வகைகளாகப் பிரிப்பர். இரு பக்கப் பரப்புகளும்