பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

வார்ப்பு வேலை

பகுதி மின் காந்த அலை பிரதிபலிப்புச் சாதனமாக அமைகிறது. மிகப் பெருமளவில் மின் துகள்களைக் கொண்ட அயனி மண்டலத்தில் மின்காந்த அலைகளைச் செலுத்திப் பிரதிபலிக்கச் செய்வதன் மூலம் பன்னாட்டு நிகழ்ச்சிகளை எளிதாக வானொலி போன்ற செய்தித் தொடர்புச் சாதனங்களின் மூலம் நாம் கேட்டுப் பயன்பெற முடிகிறது.

வாயு மண்டல ஆராய்ச்சி 1788இல் முதன் முதலில் மான்காஸ்பியர் எனும் ஃபிரெஞ்சு நாட்டுச் சகோதரர்களால் தொடங்கப்பட்டது. வெப்பக் காற்று நிரப்பிய பலூன்களைப் பறக்கவிட்டு தம் ஆய்வைத் தொடர்ந்தனர். அதன் பின் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் வாயு மண்டல ஆராய்ச்சி முனைப்புடன் செயல்படத் தொடங்கியது. பலூனில் மனிதனை அனுப்பியும், பலூனோடு கருவிகளை அனுப்பியும் ஏவு கணைகள் செயற்கைக் கோள்கள் போன்றவற்றை தொடர்ந்து அனுப்பி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாயுக்களின் மூலம் பயன்தரத்தக்கப் பல முடிவுகள் கிட்டியுள்ளன. வாயு மண்டல ஆராய்ச்சி மூலம் வானிலை ஆய்வு பெரு வளர்ச்சி பெற்றுள்ளதெனலாம்.

வாயு மண்டலத்தால், அண்டத்திலிருந்து புறவூதாக் கதிர், காஸ்மிக் கதிர்கள் போன்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்கப்படுவதோடு, விண்ணிலிருந்து விழும் எரி நட்சத்திரங்கள் பூமியை அடைய முடியாமல் வாயு மண்டல உராய்வால் எரிந்துபோக நேர்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, பூமியின் தட்பவெப்ப நிலை சமச்சீராக அமைய வாயு மண்டலமே முழு முதற் காரணமாய் அமைந்துள்ளது எனலாம்.


வார்ப்பு வேலை : இஃது ஆங்கிலத்தில் 'கேஸ்டிங்' என்று கூறப்படும் 'வார்ப்பு’ தொழில் இன்றைய தொழில் துறையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நமக்குத் தேவையான வடிவிலும் அளவுகளிலும் உலோகத்தை உருக்கி, அதற்கென வடிவமைக்கப்பட்ட அச்சில் வார்த்து தேவையான பொருளைப் பெறுவதே வார்ப்பு ஆகும். வார்ப்புத் தொழில் பண்டு தொட்டே நம் நாட்டிலும் சீனா, எகிப்து, கிரேக்க, ரோம நாடுகளிலும் இருந்துவந்துள்ளது. பன்னெடுங்காலமாக வார்ப்புத் தொழில் ஒரு அருங்கலையாவே வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இன்று வார்ப்படத் தொழில் மிகச் சிறந்த தொழில்நுட்பத் திறத்துடன் நவீன கருவிகளைக் கொண்டு கையாளப்பட்டு வருகிறது.

முதலில் எந்த வடிவில் பொருளை வார்த்தெடுக்க விரும்புகிறோமோ அதற்கேற்ற மாதிரி வடிவை வடிவமைத்துக்கொள்ளவேண்டும். இஃது தேக்கு மரத்திலோ உலோகத்திலோ அமையலாம். இது இரு சமபகுதிகளாக இருக்கும். இதைக் கொண்டு வார்ப்புப் பொருளைத் தயாரிக்கும்போது பொருளின் மேட்டுப்பகுதி வார்ப்பில் பள்ளமாகவும், பள்ளமாக உள்ள பகுதி வார்ப்பில் மேடாகவும் அமையும். இவ்வார்ப்பு ஒரு தனிவகை மணலைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

வார்ப்புத் தொழிலுக்கு நன்கு சலித்தெடுக்கப்பட்ட தனிவகை மணல் இன்றியமையாததாகும். இம்மணலின் துணை கொண்டே எத்தகைய வார்ப்பும் உருவாக்கப்படுகிறது. இத்தனிவகை மணல் சில இடங்களில் இயற்கையாகவே கிடைக்கிறது. மணலின் தன்மையைப் பொறுத்தே வார்ப்புப் பொருளின் தன்மையும் தரமும் அமைய முடியும். இம்மணல் பச்சை மணல், உலர் மணல், குறு மணல் என மூவகையினவாக உள்ளன.

இனி, எவ்வாறு வார்ப்பு வேலை செய்யப்படுகிறது என்பதைக் கவனிப்போம். வார்ப்பு வேலைப் பெட்டி 'வார்ப்பு இரும்பு’ (Cast iron) எனும் தனிவகை உலோகத்தைக் கொண்டு இரண்டு பகுதிகளாகச் செய்யப்படும். இது சதுர வடிவிலோ அன்றி செவ்வகமாகவோ இருக்கும். முன்பே உருவாக்கப்பட்டுள்ள மாதிரி வடிவின் ஒரு பகுதியை சரியாக வைத்து அதைச் சுற்றிலும் தனிவகை மணலைப் போட்டு நன்றாக கெட்டிப்படுத்துவர். அதன்பின் முன்பு பதிக்கப்பட்ட மாதிரி வடிவை வெளியே மெதுவாக எடுத்து விடுவர். இப்போது கெட்டிப்படுத்தப்பட்ட மணலின் உட்பகுதி மாதிரி வடிவினையுடையதாகும். மற்றொரு வார்ப்புப் பெட்டியும் மற்றொரு வடிவைக் கொண்டு இதேபோன்று செய்யப்படும். பின்னர், பெட்டியின் இரு பகுதிகளையும் ஒன்றாக இணைப்பர். நன்கு மூடப்பட்ட அப்பெட்டியினுள் ஒரு துளை வழியே உருக்கிய உலோகக் குழம்பை ஊற்றுவர். மாதிரி வடிவப் பகுதி முன்பு அடைத்துக் கொண்டிருந்த பகுதி முழுவதும் ஓடி நிரம்பும். வார்ப்புப் பெட்டியில் உள்ள மற்றொரு துளை வழியாக காற்றும் வாயு வடிவிலான பிற அசுத் தங்களும் வெளியேறி விடும். நன்கு குளிர்ந்த