பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்பு வேலை

273

பின் வார்ப்புப் பெட்டியைத் திறந்தால் அங்கு மாதிரி வடிவிலுள்ள உருவில் வார்ப்புத் தயாராக இருக்கும்.

உருகிய உலோகக் குழம்பை வார்ப்புச் சட்டகத்தில் ஊற்றுதல்

உருக்கிய உலோகம் ஊற்றப்பட்ட துளை வாயிலிலும் அசுத்தக் காற்று வெளியேறிய துணைப் பகுதியிலும் பிற பகுதிகளிலும் உள்ள தேவையற்ற பிசிறுகளை செதுக்கி நீக்கிவிடவேண்டும். பின், அரத்தால் அல்லது உப்புக் காகிதம்,மெருகுத் தாள் போன்றவற்றால் தேய்த்து மெருகேற்றுவர்.

உட்கூடான வார்ப்புகளைச் செய்ய வேறு ஒரு முறை கையாளப்படுகிறது. உட்கூடான ஒரு உருளை வடிவ வார்ப்பை உருவாக்க வேண்டுமெனில் உட்கூட்டு வடிவிலமைந்த உருகிய உலோகக் குழம்பை ஊற்றி விரைந்து சுழலச் செய்வர். அப்போது உருகிய உலோகம் உட்கவரில் படிந்து அழுந்தப் பதிந்துவிடும். குளிர்ந்த பின் உருளை வார்ப்பைப் பெற முடியும். இம்முறைக்கு 'விளக்கு வார்ப்பு' (Centrifugal) என்று பெயர், இதற்கான வார்ப்புருவை எளிதில் உருகாப் பொருளால் (Refractory Material) உருவாக்கப்படுகிறது.

மெழுகைப் பயன்படுத்தி வார்ப்புச் செய்வதும் உண்டு. மிக நுட்பமான வார்ப்புருக்களை உருவாக்க மெழுகு முறை பயன்படுகிறது. மெழுகு வடிவமைப்பின் மீது ஒரு வகைக் களிமண்ணை நன்கு காயும்படி செய்வர். பின்பு,

18