பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

வானிலையியல்

வியல் வளர்ச்சிக்கு வேகமும் விறுவிறுப்பும் ஊட்டின எனலாம். அவருக்குப் பின் வந்த மாபெரும் வானவியல் வல்லுநர் கெப்ளர் ஆவார். இவரே சூரியனை பூமி மற்றும் பிற கிரகங்ககளும் எவ்வாறு சுற்றி வருகின்றன என்று கண்டறிந்து கூறியவர். இன்றும் அவரது கண்டுபிடிப்பு 'கெப்ளரின் விதிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவருக்குப் பின்வந்த நியூட்டன் கிரகங்களுக்கிடையிலான விசையாற்றல் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்து கூறினார். சூரிய மண்டல அமைப்பையும் சூரியனைச் சுற்றி பூமியும் சந்திரனும் பிற கிரகங்களும் சுழல்வதையும் ஆய்வு பூர்வமாகக் கண்டறிந்து நிறுவினார். வானில் வெகு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள், ஆகாய கங்கை போன்ற பல்வேறு வானியல் உண்மைகளையும் நுட்பமாகக் கண்டறிந்து கூறினார்.

வானியல் ஆய்வுகளே விண்வெளி ஆய்வுக்குக் கதவு திறந்துவிட்டன எனலாம். கதிரவன், நட்சத்திரங்கள், நிலவு போன்ற மற்ற கோள்களின் தன்மைகளையும் அமைப்புகளையும் அவற்றிற்கிடையேயான இழு விசைகளையும் அறிந்து தொடர் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள இயன்றது. வானவியல் வளர்ச்சியின் விளைவாகவே நேரங்களைத் துல்லியமாகக் கணிக்கவும் முடிந்தது.


வானிலையியல் : நாம் நாள் தோறும் தொலைக் காட்சியிலும் வானொலியிலும் அன்றைய வெப்ப நிலையின் அளவையும் மழை பெய்திருந்தால் மழையின் அளவையும் வானிலைச் செய்தியாகக் கூறுவதைக் கேட்டு வருகிறோம். அன்றைய வெப்ப, மழையளவோடு அடுத்த 48 மணி நேரத்தில் வானிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் முன்னறிவிப்புச் செய்வதையும் கேட்கிறோம். காற்று மண்டலத்தில் நிகழும் வானிலை மாற்றங்களைத் ஆய்ந்து கூறுவதே வானிலையியல் ஆகும்.

பண்டையக் காலத்தில் வானை அண்ணார்ந்து பார்த்து, அனுபவ அறிவின் அடிப்படையில் யூகமாக அனுமானிப்பதே வானிலை அறியும் போக்காக இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் வெப்பமானி, பாரமானிக் கருவிகள் கண்டறியப்பட்ட பின்னரே வானிலையியல் முறையான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைய முடிந்தது.

வானிலைகளை முன்னதாக அறிவதன் மூலம், வெயில், மழை, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து தப்பும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட முடிகிறது. இதனால் பேரிடரும் பேரிழப்பும் தவிர்க்கப்படுகிறது.

இக்காலத்தில் ஏற்பட்டுள்ள அறிவியலின் விரைவான வளர்ச்சியின் விளைவாக வெயிலின் தகிப்பை துல்லியமாக அளந்தறிய கருவிகள்

கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் பெயர் 'வெயில்மானி' என்பதாகும். இதன் மூலம் ஒரு நாளின் குறைந்த அளவு வெப்பத்தையும்

அதிக அளவு வெப்பத்தையும் துல்லியமாக அளந்தறிய முடியும். இந்த அளவு 'செல்சியஸ்’ என்ற அளவால் குறிக்கப்படு