பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

விமான எதிர்ப்புப் பீரங்கி

விண்கலத்தை வெள்ளிக் கோளுக்கும் 1964இல் மாரினர் -4 என்ற கலத்தை செவ்வாய்க்கும் அனுப்பி ஆய்வு செய்தனர்.

அண்மைக் காலமாக அமெரிக்கர் கொலம்பியா எனும் விண்வெளி ஓடத்தை பல விண்வெளி ஆய்வாளர்களுடன் பல தடவை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வுகள் செய்த பின்னர்

புறப்படத் தயாராயுள்ள விண்வெளி ஒடம்

தரைக்கு மீளச் செய்துள்ளது. இதில் அமெரிக்கர்கள் மட்டுமல்லாது மற்ற நாட்டு விண்வெளி ஆய்வாளர்களும் பயணம் செய்து மீள்வது குறிப்பிடத்தக்க சிறப்புச் செய்தியாகும்.

விண்வெளி ஆய்வில் இந்தியாவும் முனைப்புக் காட்டி வருகிறது. விண்வெளி ஆய்வுக்கென கேரள மாநில கடற்கரைப் பகுதியான தும்பா எனுமிடத்தில் ஏவுகணை தளம் ஒன்றை அமைத்துள்ளது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுதுணையும் உண்டு. விண்வெளி ஆய்வில் அமெரிக்க, ரஷ்ய உதவியும் ஆரம்ப முதலே இருந்து வந்துள்ளது. இங்கிருந்து 1968ஆம் ஆண்டில் நைக் அப்பாஷி எனும் அமெரிக்க ஏவுகணை செலுத்தப்பட்டது. அதன்பின் பலமுறை ரோஹினி எனும் இந்திய ஏவுகணைகள் விண்வெளி ஆய்விற்கெனச் செலுத்தப்பட்டுள்ளன.

ஆந்திர மாநில கடற்கரைப் பகுதியான ஸ்ரீஹரி கோட்டாவில் மற்றொரு ஏவுகணை தளம் உள்ளது. இங்கிருந்து பலமுறை ஏவுகணை சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாயிரம் மைல் சென்று தாக்க வல்ல அக்னி,பிரித்வி ஏவுகணைகளின் சோதனை மாபெரும் வெற்றி பெற்றது. இஃது இந்திய விண்வெளி ஏவுகணை விஞ்ஞானிகளின் திறமைக்குக் கட்டியங் கூறும் நிகழ்ச்சியாகும்.


விமான எதிர்ப்புப் பீரங்கி : போர்க் காலங்களில் வானில் பறந்து வந்து குண்டு வீசும் எதிரி விமானங்களை தரையிலிருந்தபடியே பீரங்கிக் குண்டுகளால் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதே விமான எதிர்ப்புப் பீரங்கி.

குண்டுவீச வரும் பகை விமானங்கள் மேலாகவோ, கீழாகவோ பக்கவாட்டிலோ விரைந்து திரும்பும் தன்மை கொண்டவை. எனவே, அவ்விமானங்களைத் தாக்கும் விமான எதிர்ப்புப் பீரங்கிகளும் மேல்நோக்கியோ பக்கவாட்டிலோ விரைந்து திரும்பும் தன்மையுடையதாகும். இதில் தரைப் பகுதிகளைத் தாக்கப் பயன்படும் சாதாரண குண்டுகளுக்குப் பதிலாக உயரமாக வெகு தொலைவு சென்றபின் வெடிக்க வல்ல வெடிகுண்டுகள் (Shells) பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கச் செய்யும் அமைப்பு

இதில் உண்டு. அவ்வாறு எதிரி விமானத்தை நோக்கிச் சென்று வெடித்துச் சிதறும் குண்டுகளால் விமானம் தாக்குண்டு அழியும் அல்லது பெரும் சேதத்தை குண்டு வீச்சு விமானங்களுக்கு ஏற்படுத்தும்.