பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

விமான தளம்

பாதுகாப்புக்கென கப்பற்படையில் விமானந் தாங்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளன.

விமானந்தாங்கிக் கப்பல்

நமது இந்தியக் கப்பற்படையில் புகழ் பெற்ற விமானந் தாங்கிக் கப்பலாக அமைந்திருப்பது

விக்ராந்த்

'விக்ராந்த்' கப்பலாகும். ‘விராம்” என்பது மற்றொரு புகழ்பெற்ற இந்திய விமானந் தாங்கிக் கப்பலாகும். இது 1987ஆம் ஆண்டில் கப்பற்படையில் இணைக்கப்பட்டது.


பேருந்துகள் வந்து செல்ல பேருந்து நிலையம் இருப்பதுபோன்று, ரயில்கள் வந்து செல்ல ரயில் நிலையம் உள்ளது போல் விமானங்கள் வந்து செல்ல விமான நிலையங்கள் அமைந்துள்ளன. ஆனால், மற்ற வாகன நிலையங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. பேருந்துகளும், ரயில்களும் தரையில் மட்டுமே ஊர்வனவாகும். ஆனால், விமானங்கள் வானில் பறந்து செல்வனவாகும். எனவே, விமான தளங்கள், விமானங்கள் தரையில் இறங்கியவுடன் நீண்டதுாரம் ஓடி நிற்கும் தன்மையுடையன. அவ்வாறே, ஏறும்போது நீண்டதூரம் தரையில் ஓடி வானில் பறக்கும் இயல்புடையன. எனவே, மற்ற நிலையங்களைவிட விமான தளங்கள் நீண்ட நிலப் பரப்புடையனவாக உள்ளன.

விமான தளங்கள் பலவகை அளவுள்ள சிறிய பெரிய விமானங்கள் எளிதாக இறங்கி