பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

விமான தளம்

தனி விதிமுறைகள் உண்டு. இவ்விதிமுறைகள் சர்வதேச அளவில் அமைந்துள்ளன.

விமானமோட்டி அளவு (Cockepit)

இதேபோன்று தரை இறங்கவரும் விமானம் தளம் எங்கே உள்ளது என்பதை எளிதாக அறியும்வண்ணம் விமான தளத்தில் உள்ள உயரமான கட்டிடத்தின் உச்சிப் பகுதியில் சுழலும் ஒளி மிகுந்த விளக்கொன்று பொருத் தப்பட்டிருக்கும். கடலில் மிதக்கும் கப்பல்களுக்குக் கரைகாட்டும் கலங்கரை விளக்கம் போன்று, இச்சுழல் விளக்குகள் விமான தளத்தைக் காட்டுகின்றன.

காற்றின் போக்கும் வானிலையும் விமான இயக்கத்திற்கு இன்றியமையாதனவாதலின் ஒவ்வொரு விமான தளத்திலும் வானிலை ஆய்வு மையம் ஒன்று அமைந்திருக்கும். இறங்க அல்லது ஏற முனையும் விமானிகளுக்கு வானிலையைமுன்கூட்டியே அறிவிப்பதால் எதிர்பாராத விபத்துக்கள் மோசமான வானிலையால் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

சாதாரணமாகச் சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் காவலர் இயங்குவதை சாலைச் சந்திப்புகளில் பார்த்திருக்கலாம். இதே போன்று விமான தளங்களில் வந்து இறங்க விழையும்