பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

விமானம்

விமானத்தை மேலே உயர்த்தவோ, கீழே இறக்கவோ அல்லது சம மட்டத்தில் வைத்திருக்கவோ இயலும். 'ரட்டர்' எனப்படும் சுக்கானையும் எய்விரானையும் கொண்டு

துருவப் பிரதேச விமானம்
கொலம்பியா விண்கல விமானம்

விமானத்தை எப்பக்கமும் திருப்ப இயலும். விமானம் ஏறும்போதும் இறங்கும்போதும் ஒடு பாதையில் சிறிது ஓடியே நிற்கவோ, பறக்கவோ இயலும். இதற்காக விமானத்தின் அடிப்பாகத்தில் முன்னால் இரண்டும் பின்னால் ஒன்றுமாக ரப்பர் சக்கரங்கள் அமைந்திருக்கும். இதை வேண்டியபோது வெளியே நீட்டவோ மடக்கி வைத்துக்கொள்ளவோ முடியும்.

இன்றைய நவீன விமானங்களில் முன்னால் துருத்திக் கொண்டிருக்கும் விசிறி வடிவிலான புரொப்பெல்லராகிய செலுத்திகள் இடம் பெறுவதில்லை. இவற்றில் ஜெட் என்ஜின்கள் பயன்படுத்தப்படுவதால் இவ்விமானங்களும் ‘ஜெட் விமானங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. இவ்விமானத்தில் ஜெட் என்ஜினில் எரியும் எரிபொருள் வாயுவாக விமானத்தின் பின் பகுதியில் உள்ள துவாரம் வழியே விரைந்து வெளிப்படுவதால் விமானம் விரைந்து முன்னோக்கிச் செலுத்தப்படுகிறது.

இன்று ஒலியையும் விஞ்சும் அதிவேக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.