பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வில்பர் ரைட்

293

ஓரிருவர் அல்லது ஒருசிலர் மட்டும் பயணம் செய்யும் சிறுவகை விமானமாக ஹெலிகாப்டர் பயன்பட்டு வருகிறது. இதைத் தரையிலிருந்து நேராக வானை நோக்கிச் செலுத்த முடியும்.

காற்றிலும் விரைந்து செல்லும் கான்கார்டு விமானம்

அவ்வாறே தரையில் இறக்கவும் முடியும். இதனால் அதிக உயரத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும் வேண்டிய திசையில் திருப்பவும் வானில் நிலையாக நிறுத்தவும் இதனால் முடியும். வெள்ளம், பூகம்பம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவசர சமயங்களில் ஹெலிகாப்டர் விமானங்கள் பேருதவி செய்கின்றன.

சாதாரணமாக பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம், குண்டு வீச்சு விமானம், கடற்கரைக் காவல் விமானம் எனப் பலவகை உண்டு. இன்று உள்நாட்டில் மட்டுமல்லாது நாடு விட்டு நாடு விரைந்து அஞ்சல் அனுப்ப விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வயல்களில் பூச்சி மருத்து தெளிக்க சிறு வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவிலேயே இன்று பலவகை விமானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெங்களுரில் போக்குவரத்துக்கான பயணி விமானங்களும் ஹெலிகாப்டர்களும் உருவாக்கப்படுகின்றன. விமானங்களுக்கான என்ஜின்களும் இங்கு உருவாக்கப்படுகின்றன. நாசிக்கில் இராணுவ விமானங்கள் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. கான்பூரில் சரக்கு விமானங்களும் பயணிகளின் விமானங்களும் தயாராகின்றன. ஐதராபாத்தில் விமானங்களுக்கான மின் கருவிகளும் ராடார் போன்ற நுட்பக் கருவிகளும் உருவாக்கப்படுகின்றன. இலட்சுமணபுரியில் ஹெலிகாப்டரின் உதிரிப்பாகங்களும் கோரக்பூர் என்னுமிடத்தில் எஞ்சின்களும் தயாரிக்கப்படுகின்றன.


வில்பர் ரைட் : முதன்முதலில் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களில் இவர் மூத்த சகோதரர் ஆவார். இவர் 1867 -இல் பிறந்தார். இளைய சகோதரர் ஆர்வில் ரைட் 1871இல் பிறந்தார். சகோதரர்கள் இரு