பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

வெப்பமானி

ரேகையிலும் 23½0 தள்ளி தெற்கேயுள்ள கடக ரேகையிலும் முறையே ஜூன், டிசம்பரில் கதிரவன் தோன்றும். இப்பகுதியில் சூரியன் செங்குத்தாகத் தோன்றாது. சாய்வாகத் தோன்றுவதால் இப்பகுதி மிதவெப்ப மண்டல (Temperate zone) ஆகும். மிகக் குளிர்மண்டலம் (Frigid zone) துருவப் பகுதிகளில் அமைந்துள்ளது.

வெப்ப மண்டலத்தில் வெப்பம் மட்டுமல்ல மழையும் அதிகமாகப் பெய்யும். இங்குதான் காடுகளும் மிகுதி. அதிலும் வெப்ப மண்டல ஆற்றுப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் மிகுதியாக உள்ளன. அமெரிக்க அமேசான் நதிப் பகுதி காடுகளிலும் ஆஃப்ரிக்கக் காங்கோ நதிப்புறத்துக் காடுகளும் புகழ்பெற்றவைகளாகும்.

வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளிலும் காடு சார்ந்த பகுதிகளிலும் தேக்கு, ரப்பர், மற்றும் பனைவகை மரங்களும் மிகுதியாக வளர்கின்றன. பல்வேறு வகையான பழ மரங்களும் இப்பகுதியிலேயே அதிகம். எண்ணெய் வித்துக்களும் வாசனைப் பொருட்களும் இப்பகுதியிலேயே ஏராளமாக விளைகின்றன.

விலங்கினங்களும் வெப்ப மண்டலப் பகுதியிலேயே மிக அதிகமாக உள்ளன. யானை, சிங்கம், புலி, குதிரை போன்றவைகளும் பல வகைப் பறவைகளும் பூச்சியினங்களும் கூட இப்பகுதியில் தான் மிகுதியாகவுள்ளன. வெப்ப மண்டலக் கடற்கரைப் பகுதிகளில் முதலை, ஆமை, மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்களும் கூட பெரியவைகளாக உள்ளன. இதற்குக் காரணம் அவற்றின் செழிப்பான வாழ்க்கைச் சூழலுக்கு வெப்ப மண்டலப் பகுதி ஏற்றவையாக இருப்பதுதான்.


வெப்பமானி : வெப்ப அளவைக் கண்டறிய உதவும் கருவிகளுள் ஒன்று வெப்பமானி ஆகும். சாதரணமாகப் பொருள் சூடானதா அல்லது குளிரானதா என்பதைக் கையால் தொட்டு ஓரளவு அறியலாம். ஆனால், வெப்பத்தைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டுமானால் அதை வெப்ப மாணியைக் கொண்டே அளந்தறிய முடியும்.

வெப்பத்தைப் பெறுகின்றபோது பொருட்கள் விரிவடையும் எனும் இயற்பியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெப்பமானி அமைந்துள்ளது.

வெப்பமானி தந்துகிக் குழாய் உள்ள கண்ணாடித் துண்டால் செய்யப்பட்டது.

இரு புறமும் நன்கு மூடப்பட்ட இதன் அடிமுனை சிறு குமிழாக இருக்கும். இக்குமிழ்ப் பகுதியில் பாதரசம் அல்லது ஆல்கஹால் நிரப்பப்பட்டிருக்கும். குழாயின் எஞ்சிய மேற்பகுதி வெற்றிடமாக இருக்கும். சூடான பொருளின் மீது குமிழ்பகுதியை வைத்தால் அதன் வெப்பச் சக்திக்கேற்ப குமிழிலுள்ள பாதரசம் அல்லது ஆல்கஹால் விரிவடைந்து மேலேறும். வெற்றிட மேற் பகுதி வெப்பநிலையில் அளவைக் குறிக்க எண்களும் கோடுகளும் இருபுறமும் இருக்கும். எந்த எண்ணுக்கு பாதரசம் அல்லது ஆல்ஹால் ஏறி நிற்கிறதோ அந்த அளவே அப்பொருளின் வெப்ப அளவு ஆகும். வெப்பப் பொருளினின்றும் வெப்பமானியை எடுத்துவிட்டால் பாதரசம் அல்லலது ஆல்கஹால்

உச்ச, நீச வெப்பமானி

வெப்பத்தை இழந்து மீண்டும் பழைய நிலையில் அடிக் குமிழுக்குள் சென்றுவிடும்.

வெப்பநிலையை செல்சியஸ், ஃபாரன்ஹீட் மற்றும் ரோமர் என்ற அளவு முறைகளில்