பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

வேக மானி

னும் இப்பழக்கம் தொடரவிடுவதும் உண்டு. சாதாரணமாக எந்த வெறிமயக்க மருந்தையும் தொடர்ந்து நான்கு வார காலம் பயன்படுத்தினால் அம்மருந்துக்கு அடிமையாகிவிடும் நிலமை ஏற்பட்டு விடுமெனக் கூறப்படுகிறது.

இவ்வெறி மயக்க மருந்துகளைத் தொடர்ந்து உட்கொண்டால் மருத்துவ அடிப்படையில் பார்க்கும்போது உடல்நலம் முழுமையாகக் கெடும். நாவு தடித்து கரடு முரடாகிவிடுவதால் பேச்சில் குழைவு உண்டாகும். நாளடைவில் தோல் தன் இயல்பான நிறத்தை இழந்துவிடும். தோலில் ஒருவித நமைச்சல் உண்டாகும்.

வெறிமயக்க மருந்துக்கு அடிமையாகிப் போனவர் திடுமென மருந்தை நிறுத்தினால் வேறுசில கோளாறுகள் ஏற்படும், வாந்தி பேதி ஏற்படும். கைகால்களில் நடுக்கம் தோன்றும். சிலருக்குக் கடுமையான உடல் உபாதை உண்டாகும். இதனால் இறப்பும் ஏற்பட நேர்வதுமுண்டு.

இத்தகையவர்கள் மனவுறுதி குலைந்தவர்களாகக் காணப்படுவர். ஒழுக்கச் சிதையைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். பொறுப்புணர்ச்சி குறைந்தவர்களாக ஆகிவிடுவர். நாண உணர்ச்சிகூட அவர்களிடமிருந்து போய்விடும்.

மருத்துவ நோக்கத்திற்காக இவ்வெறி மயக்க மருந்துகளை உட்கொள்வோர் அந்நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். நோய் தீர்ப்பதன்றி வேறு நோக்கம் இருத்தல் கூடாது. ஒரு சில வாரங்கள் தொடர்ந்து உட்கொள்ள நேரின் நோய் தீர்ந்த பின் நிறுத்திவிட வேண்டும். பல மாதங்கள் தொடர்ந்து உட்கொள்ள நேர்ந்தால் சிறிது சிறிதாக நிறுத்த வேண்டும்.

இவ்வெறி மயக்க மருந்துகளுக்கு அடிமையானவர்கள் இப்பழக்கத்திலிருந்து மீள அதற்கென தனிவகைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மனோதத்துவ மருத்துவமும் செய்து கொள்ள வேண்டும். மனவுறுதியே இதற்குப் பெருந்துணையாய் அமைய முடியும். இப்பழக்கத்திலிருந்து மீளவே முடியாது என்ற உச்ச நிலையை ஒருவர் அடைந்து விட்டால், அவர் இவ்வெறிமயக்க மருந்தை குறைந்த அளவில் உட்கொண்டு, அதன் மூலம் தன் துன்பத்தையும் குறைத்துக் கொள்ளலாம்,


வேகம் : விரைந்து செல்லுவதை 'வேகம்' என்று கூறுகிறோம். மனிதன், பிராணிகள் ஓடுவது, எந்திரங்கள் விரைந்து இயங்குவது, வாகனங்கள் விரைவாகச் செல்லுவது ஆகிய இவையெல்லாம் வேகத்தின்பாற் பட்டதாகும்.

மிக வேகமாக நடப்பதும்கூட வேகத் தன்மையுடையதாகும். ஒரு மனிதன், விரைந்து ஓடினால் 8 நிமிடங்களுக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க முடியும். மனிதர்களைவிட குதிரை விரைந்து வேகமாக ஓட வல்லதாகும். குதிரையின் வேகத்தையும் விஞ்சவல்லது சிறுத்தையின் ஓட்டம். பறவைகள் விலங்குகளைவிட இருமடங்குக்குமேல் விரைந்து பறக்க வல்லனவாகும்.

அறிவியல் வளர்ச்சியின் விளைவாக மனிதன் விரைந்து செல்லும் வகையில் தனக்குத் துணைபுரிய சைக்கிள், கார், ரெயில், கப்பல், விமானம், ராக்கெட் எனப் புதிய வாகனங்களை உருவாக்கலானான். ராக்கெட்டுகள் மணிக்கு நாற்பதாயிரம் கி.மீ. வேகத்தில் செல்லவல்லவனவாகும்.


வேகமானி : ஓட்டப் பந்தயங்களின்போது ஓடும் ஒருவரின் நேரத்தை துல்லியமாகக் கணக்கிட ஒருவகை தனிக் கடிகாரத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கலாம். அதை ‘நிறுத்த கடிகாரம்’ எனத் தமிழிலும் ‘ஸ்டாப் வாட்ச்' என்று ஆங்கிலத்திலும் கூறுவர். இதனால் ஓடும் நேரத்தை மட்டுமல்லாது ஓடும் வேகத்தையும் கணக்கிட்டறிய முடியும்.

அதேபோன்று ஒரு வாகனம் செல்லும் வேகத்தைக் கண்டறிய தனிவகைக் கருவியுண்டு. வேகத்தை அளக்கும் அக்கருவி வேகமானி(Speedometer) என அழைக்கப்படுகிறது. இதனைக் கொண்டு விரைந்து செல்லும் வாகனம் மணிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்லுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

வேகத்தை அளக்கும் வேகமானிக் கருவி சாலையில் விரைந்து ஓடும் வாகனங்களான கார், லாரி, வேன், மோட்டார், சைக்கிளில், ஸ்கூட்டர் முதலான வாகனங்கள் அனைத்திலும் பொருத்தப்பட்டிருக்கும். ஒட்டுநர் எளிதாகக் கவனித்துக் கொண்டிருக்கும் வகையில் அவர் முன்பாக உள்ள தட்டில் பொருத்தப் பட்டிருக்கும்.

வேகமானிக் கருவி வட்ட வடிவமாக இருக்கும். அதில் 0 முதல் 100 அல்லது 140 வரை