பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜெராக்ஸ்

309

யமைக்கப்பட்ட நீராவி எஞ்சினைவிடத் திறம்பட்டதாக புதியதோர் நீராவி எஞ்சினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலானார்.

வாட்டின் நீராவிப் பொறி (1769)

இதற்காக போல்ட்டன் எனும் பர்மிங்ஹாம் தொழில்

நீராவி சுருங்குவதை நிறுவன் வாட் கவனித்தல்

அதிபருடன் சேர்ந்து நீராவி எஞ்சினை உருவாக்கும் புதிய நிறுவனத்தை உருவாக்கினார். இதன்மூலம் இவரது ஆராய்ச்சி பெரும் முனைப்புப் பெற்றது. புதிய வடிவமைப்போடு கூடியதாக உருப் பெற்ற நீராவி எஞ்சின்கள் சிறப்பாக இயங்கின. நிறுவனமும் பெரும் பொருளிட்டியது.

இவரது ஆய்வு முயற்சி நீராவி எஞ்சினோடு நின்றுவிடவில்லை. தொண்டை வால்வு (Throttle volve), கட்டுப்படுத்தி (Governor). போன்ற புதிய வகை உலை போன்ற கருவிகளை உருவாக்கினார். திறனையளக்கும் குதிரைத் திறன் (Horse power) அலகை வகுத்தவர் இவர்தான். மெட்ரிக் முறையில் அளவிடப்படும் திறனை அளக்கும் அலகான 'வாட்’ என்பதை இவரது பெயரைக்கொண்டு இன்றும் அழைத்து வருகின்றனர்.

இவருக்கு முன்புவரை நீர் ஒரு தனிமம் எனக் கருதப்பட்டு வந்தது. ஆனால், இவர் தம் ஆராய்ச்சிமூலம் நீர் ஒரு தனிமம் அல்ல; அஃது, ஒரு கூட்டுப் பொருளே என்பதை எண்பித்தார்.

இவர் 1819ஆம் ஆண்டு ஹான்ட்ஸ் வொர்த் எனுமிடத்தில் காலமானார்.


ஜெராக்ஸ் : இஃது அசலுக்கு நகல் உருவாக்கும் ஒருவகை இயந்திரமாகும். இக்கருவி மூலம் ஒரு மூலத்துக்கும் பல படி(பிரதி)களை மிகக் குறைந்த நேரத்தில் பெறமுடியும்.

மின்சாரத்தால் இயங்கும் இக்கருவியில் மேற் பகுதியில் படியெடுக்க வேண்டிய நூல் அல்லது தாளை தலைகுப்புற படுக்கை வசமாக வைக்க வேண்டும். படி யெடுப்பதற்கான தாளை இயந்திரத்தின் ஒரு மேல் முனையிலிருந்து உட்செலுத்துவர். உள்ளே செல்லும் தாளின் மீது, மேலே கிடைமட்டத்தில் குப்புற வைக்கப்பட்டுள்ள நூல் அல்லது தாளில் உள்ள எழுத்து வரிகள் அல்லது பட வரைகள் தனிமம் பூசப்பட்ட உருளைமீது மிகு ஒளியின் விளைவாகப் படியும். அவ்வுருளையில் பூசப்பட்டுள்ள மை தாளில் படிய நகல் உருவாகிறது. இந்நகல்தான் பின்புறம் வழியாக வெளியேறுகிறது. தற்போது இவை கணிப்பொறியின் துணை கொண்டு இயங்குகின்றன.


ஸ்டீவன்சன் : இன்றைய வாழ்வில் ரயில் வண்டிகளின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதாகும். இன்று பலவகையான ரயில் வண்டிகள் உருவாகி ஓடுகின்றனவெனில் இதற்கு அடிப்படை அமைத்தவர் ஸ்டீவன்சன் ஆவார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவரின் முழுப்பெயர் ஜார்ஜ் ஸ்டீவன்சன் என்பதாகும். இவர் 1781ஆம் ஆண்டு நியூகாசில் நகருக்கு அருகில் உள்ள வைலம் எனு மிடத்தில் பிறந்தவராவார்.