பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

ஹெலிகாப்டர்

வியலாளர்கள் ஆவர். இவர்கள் கிளீவைட் என்ற தாதுப்பொருளை அமிலத்துடன் காய்ச்சும்போது வெளிப்பட்ட வாயுவை ஆராய்ந்தபோது ஹீலியம் வாயுவைக் கண்டறிந்தனர். 1868-லேயே சூரியமண்டலத்தில் இவ்வாயு இருப்பதாகக் கண்டறியப்பட்ட போதிலும் 1895ஆம் ஆண்டில்தான் இவ்வாயுவைப் பிரித்தறியும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

சாதாரணமாக யுரேனியத் தாது, மோனசைட், கிளீவைட், பிச்பிளண்ட் போன்ற தாது வகைகளிலும் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து வெளிப்படும் இயற்கை வாயுக்களிலும் அதிக அளவு ஹீலியம் உண்டு. ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக எடை குறைந்த வாயுவாதலால் 310 மைல்களுக்கப்பால் உள்ள வாயு மண்டலத்தில் ஹைட்ரஜன் வாயுவும் ஹீலியம் வாயுவும் அதிக அளவில் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்கள்.

ஹைட்ரஜன் வாயுவைப் போன்று இதற்கு எரியும் திறன் இல்லாததால் இஃது பெரும் பலூன்களிலும் ஆகாயக் கப்பல்களிலும் நிரப்பப் பயன்படுத்தப்பட்டது. மேலும், ஆழ்கடலுள் ஆய்வுக்கென மூழ்குவோர் ஆக்சிஜன் வாயுவுடன் ஹீலியம் வாயு கலக்கப்பட்ட கலவையைச் சுவாசிக்கக் கொண்டு செல்வதுண்டு. குறைந்த வெப்ப நிலையைப் பெறவும் ஹீலியம் வாயு பயன்படுகிறது.

ஹீலியம் வாயுவுக்கும் மணமும் நிறமும் இல்லையாதலால் இஃது பிற பொருள்களுடன் இணைந்து வினையேதும் புரிவதில்லை. இஃது எரியும் தன்மையற்றதாக இருப்பதால் பிற பொருட்களை எரிவதற்கும் துணைபுரிவதில்லை.

மற்ற வாயுக்களோடு ஒப்பிட்டால் இஃது உலகில் மிகக் குறைந்த அளவே உள்ளன எனக் கூற வேண்டும். உலகிலேயே மிக அதிக அளவில் ஹீலியம் வாயு அமெரிக்காவில் கிடைக்கிறது.


ஹெலிகாப்டர் : விண்ணில் பறக்கும் வானூர்திகளில் மிகச் சிறியது ஹெலிகாப்டர் ஆகும். மற்ற பெரிய வகை விமானங்களெல்லாம் மேலே ஏறுமுன் ஓடுபாதையில் ஓடியே வான் ஏற முடியும். ஆனால், ஹெலிகாப்டர் அப்படியன்று. அது இருந்த இடத்திலிருந்தே மேலேறவோ கீழே தரை இறங்கவோ முடியும். முன்னோக்கியோ, பின்னோக்கியோ அல்லது பக்கவாட்டில் திரும்பியோ பறக்க இயலும். பறக்கும்போது ஓரிடத்தில் சிறிது நேரம் நிலையாக நிற்கவும் முடியும்.

மற்ற விமானங்களுக்கு இருப்பது போல் ஹெலிகாப்டருக்கு பக்கவாட்டில் இறக்கைகள் ஏதும் இல்லை. முன்புறத்திலோ பக்கங்களிலோ சுழலும் செலுத்திகள் ஏதும் இல்லை.

ஹெலிகாப்டர்

மாறாக இதன் உச்சியில் படுக்கை வசமாக செலுத்தி உண்டு. இது நீளமாகவும் அகலம் குறைவானதாகவும் உள்ள சுழலும் தகடுகளாகும். இவை இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு சுழல் தகடுகளைக் கொண்டதாக இருக்கும். ஹெலிகாப்டரின் உச்சிப் பகுதியில் வெளிப்புறமாக அமைந்துள்ள இச்சுழல் தகடுகள் லேசாக வளைந்திருக்கும். சுழலி விரைந்து சுழலும்போது உச்சிப் பகுதியில் காற்று வேகமாக வீசும். அதனால் சுழலிக்குக் கீழே காற்று அழுத்தம் குறையும். இதனால் ஹெலிகாப்டர் மேல் நோக்கி உந்தப்படும்.

ஹெலிகாப்டரின் உச்சிப் பகுதியில் பெரிய சுழலி இருப்பது போன்று வால் பகுதியிலும் ஒரு சிறிய சுழலி உண்டு. இது பெரிய சுழலி போன்று தட்டையாக இராமல் வால் பகுதியில் செங்குத்தாக அமைந்திருக்கும். உச்சிப் பகுதிச் சுழலிக்கு எதிரிணையாக இவ்வால் சுழலி செயல்படும். இதனால் ஹெலிகாப்டரை பறக்கும்போது ஒரே இடத்தில் சுற்றிக்கொண் டிருக்கும்படி செய்ய முடிகிறது. அவ்வாறு