பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மை

23

அழைக்கப்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களிலுள்ள பேரளவு அம்மீட்டர்கள் அதிக அளவிலான மின்னோட்ட அளவை அளக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய அளவிலான அம்மீட்டர்கள் உந்து வண்டி, சைக்கிள் முதலானவற்றின் சிறிதளவு மின்னோட்டங்களை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது.

அம்மீட்டர் மின் அளவியைச் கொண்டு மின்னாக்கி (Electric generator). மின் செலுத்தத் தொடர் (Transmission line), மின்மாற்றி (Transformer) போன்ற அனைத்து வகை அமைப்புகளிலும் அவ்வப்போதுள்ள மின் அளவுகளை அளந்தறிய அம்மீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மின்னோட்டம் அதிகபட்ச எல்லையைக் கடக்காமல் கண்காணிக்க முடிகிறது.

“கம்பிச்சுருள் வழியே மின்சாரம் ஓடினால் அது காந்தமாக மாறும்' என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே அம்மீட்டர் மின் அளவிகள் தயாரிக்கப்படுகின்றன. அம்மீட்டரில் பல வகைகள் உள்ளன. நகரும் சுருள் (Moving coil), நகரும் இரும்பு (Moving iron), அனல் (Thermal) என்பவை அவற்றுள் சிலவாகும்.

அம்மீட்டரைக் கொண்டு மின்னாற்றலை அளக்கும்போது மின்னோட்டம் தடைபடாமல் அளக்க வேண்டும். அதற்கு இசைந்தாற் போல் அம்மீட்டர் அமைப்பு உள்ளது. நகரும் சுருள் (Moving coil) அம்மீட்டர் மின் அளவிக் கருவியில் சிறிய இரும்புத் துண்டைச் சுற்றி ஒரு கம்பிச்சுருள் இருக்கும். இது லாட காந்த முனைகளுக்கிடையே தொங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பிச்சுருள் வழியே மின்னோட்டம் செல்லும்போது, அம்மின்னோட்டத்தின் அளவுக்கேற்ப சுருளில் இணைக்கப்பட்டுள்ள முள் நகர்ந்து மின்னோட்ட அளவைக் குறிக்கும்.

அம்மை ; இது கண்ணுக்குப் புலனாகாத நுண்ணுயிரிகளால் உண்டாகும் நோயாகும். தொற்று நோய்களிலேயே மிகக் கொடிய தொற்றுநோய் அம்மை நோயாகும்.

இந்நோய்க்கான காரணங்களை அறிய இயலாத காலத்தில் மாரி என்னும் தெய்வத்தின் கோபத்தால் இந்நோய் வருவதாக மக்கள் நம்பினர். அதன் காரணமாகவே இந்நோயை 'அம்மை நோய்’ என அழைக்கலாயினர். இந் நோயை 'வைசூரி நோய்’ என்றும் கூறுவர்.

இந்நோய் ஒரு காலத்தில் உலகம் முழுமையும் பரவியிருந்தது. ஆசியாவில் மிக அதிகமாக இருந்தது. இக்கொடிய தொற்றுநோயை உலகிலிருந்து குறிப்பாக, ஆசியாவிலிருந்து ஒழிக்கவே முடியாது என்றுகூடக் கருதப்பட்டது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் இடைவிடாப் பெருமுயற்சியால் இந்நோய் ஆசியாவில் இருந்து மட்டுமல்ல, உலகி

அம்மைக் கொப்பளங்கள்

லிருந்தே முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இச்சாதனைக்குக் காரணம் முயற்சி மட்டும் அன்று. இந்நோயை ஒழிக்கத் தகுந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதுமாகும்.

இந்நோயைப் பரப்பும் கிருமிகள் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளாகும். இந் நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, பேசினாலோ இக்கிருமிகள் வெளிப்பட்டு காற்றின் மூலம் மற்றவர்களைத் தொற்றிக் கொள்கிறது.

அம்மை நோய்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் மிகக் கொடியது பெரியம்மையாகும். சின்னம்மை, தட்டம்மை போன்றவைகளும் உண்டு. இவை அதிகத் தீங்கை ஏற்படுத்துவதில்லை. இவ்விரண்டும் குழந்தைகளை மட்டுமே தாக்குகின்றன. இந்நோய் ஏற்பட்டால் உடல் முழுமையும் சிவப்புநிறத் தடிப்புகள் ஏற்படும். இந்நோய்க் கிருமிகள் காற்றின் மூலமே அதிகம் பரவுகின்றன.

பெரியம்மை நோய் தொற்றியவுடன் முதலில் காய்ச்சல் ஏற்படும். ஒரு சில நாட்களிலேயே