பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அம்மோனியா

உடலெங்கும் குறிப்பாக, உடல் தோல், வாய், மூக்கு, கண் ஆகிய பகுதிகளில் செம்புள்ளிகள் தோன்றும், அவை பின்னர் நீர்க் கொப்புளங்களாகவோ சீழ்க்கொப்புளங்களாகவோ மாறும். இன்னாட்களில் அவை அப்படியே அடங்கிவிடும்.கொப்புளம் இருந்த இடங்களில் தழும்புகள் காணப்படும். இவை உடல் அழகைக் கெடுத்து விகாரத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. சில சமயங்களில் கண்களில் ஏற்படும் கொப்புளங்களால் கண் பார்வை கெட்டுவிடும்.

ஒருவருக்கு ஒருமுறை பெரியம்மை நோய் ஏற்பட்டால் அவருக்கு மீண்டும் வாழ்நாள் முழுமையும் இந்நோய் தொற்றுவதில்லை. காரணம் அந்நோயே தடுப்புச் சக்தியை உடலில் வலுவாக ஏற்படுத்தி விடுவதாகும்.

இந்நோயைப் பொருத்தவரை வருமுன் காப்பதே முக்கியமாகும், எனவே, குழந்தைப் பருவத்திலேயே அம்மைத் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் இந்நோய் என்றுமே தலை தூக்காமல் தடுத்துவிட முடியும்.

அம்மை குத்தல் : அம்மை நோய் வராமல் தடுப்பதற்காகவும் பரவாமலிருப்பதற்காகவும் முன் பாதுகாப்பாக அம்மை குத்தப்படுகிறது. இதை 'வாக்சினேசன்’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

குழந்தைகளுக்கு இருவகைகளில் அம்மைப் பால் குத்தப்படுகிறது. பழைய முறையில் மேல்கை அல்லது முன்கையில் சுடுநீரால் சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில், ஒரு துளி

இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf
அம்மை குத்தல்

நீர்ம அம்மைப்பாலை வைத்து அம்மை ஊசியால் திருகுவார்கள். புதிய முறையில் முன் கையின் தோலில் ஊசியால் கீறி உலர் அம்மைப்பாலை தொட்டு வைப்பர். இச்சிறு அளவு அம்மைப்பாலே அம்மைநோய் எதிர்ப்பாற்றலை உடலில் ஏற்படுத்தி விடும்.

அம்மை குத்திய இருபத்திநான்கு மணி நேரத்தில் குத்தப்பட்ட இடம் சிவந்து வீங்கி விடும்; அவ்விடத்தில் கொப்புளம் தோன்றும். இஃது முத்துப்போல் இருக்கும். பத்து நாட்களுக்குப் பின் இக்கொப்புளம் உடைந்து விடும் அல்லது அமுங்கிவிடும். சில நாட்களில் கொப்புளப் பக்குகள் உதிர்ந்துவிடும். கொப்புளம் இருந்த இடத்தில் தழும்பு ஏற்பட்டிருக்கும். குத்தப்பட்ட அம்மைப்பால் உடலில் அம்மை நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி விடுகிறது.

சுமார் 250 ஆண்டுகட்கு முன்பு அம்மை நோய் தடுப்புப்பால் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில் அம்மைக் கொப்புளங்களிலிருந்து நேரடியாகச் சீழை எடுத்து மற்றவர்கள் உடலில் ஏற்றினர். இதைவிடச் சிறந்த முறையாக மாட்டம்மைப்பாலை எடுத்து மனிதர்களுக்குப் போடும் முறையை எட்வர்டு ஜென்னர் என்பவர் 1798ஆம் ஆண்டு கண்டறிந்தார். அதுவே இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது. நீர்ம முறைக்குப் பதிலாக அம்மைப் பால் உறை உலர் முறையில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒருமுறை குத்தப்பட்ட அம்மைப்பாலில் நோய் எதிர்ப்பாற்றல் நாளடைவில் குறையலாம். எனவே மூன்றாண்டுகட்கு ஒரு முறை அம்மை குத்திக் கொள்வது அவசியமாகும்.

பெரியம்மை நோய் உலகம் முழுவதும் ஒழிக்கப்பட்டுவிட்டபடியால், தற்சமயம் இந்த அம்மை குத்தல் முறை நடைமுறையில் இல்லை.

அம்மோனியா : இதை 'நலச்சார ஆவி’ என்றும் அழைப்பார்கள். இது நிறமற்ற, நெடி மிகுந்த மூச்சைத் திணறடிக்கும் ஒரு வகை வாயுவாகும். இவ்வாயுவைச் சுவாசித்தால் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டும். இது காற்றைவிட 15 மடங்கு அடர்த்தி குறைந்ததாகும். இவ்வாயு நீரில் எளிதாகக் கரையும்.

நிலக்கரி போன்ற நைட்ரஜன் மிகுந்த பொருட்களை உலர்வாலை வடித்தல் மூலம் அம்மோனியா வாயு பெறப்படுகிறது. ஒரு