பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஆகாயக் கப்பல்

சேர்ந்து வினைபுரியும்போது உருவாகும் கரைசல் அதன் தன்மைக்கேற்ப 'அமில ஆக்சைடு' என அழைக்கப்படும். காரத்தன்மை பெற்றிருப்பின் அது 'கார ஆக்சைடு’ வகையினதாகக் கருதப்படும்.

அதிக அளவு ஆக்சிஜன் உள்ள ஆக்சைடுகள் 'பெராக்சைடுகள்’ என அழைக்கப்படுகின்றன. இவ்வாக்சைடுகள் அமிலத்துடன் வினை புரிந்து ஹைட்ரஜன் பெராக்சைடுகளை தருகின்றன. ராக்கெட் எரிபொருளில் ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு ஆக்சிஜனேற்றியாகப் பயன்படுகிறது. மற்றும் இதன் நீர்க்கரைசல் வெளுக்கும் தன்மை உடையது.

ஆகாயக் கப்பல் : இன்றைய வடிவிலான விமானங்கள் கண்டறியப்படுவதற்கு முன் ஆகாயக் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. தொடக்கத்தில் தீப்பிடிக்காத ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ஆகாயக் கப்பல்களும், காற்றில் தீப்பற்றி எரியக்கூடிய ஹைட்ரஜன் வாயு நிரப்பிய ஆகாயக் கப்பல்களும் பறக்கவிடப்பட்டன. இவை அடிக்கடி தீ விபத்துக்கு ஆளாயின. இதனால் இத்தகைய வானவூர்திகள் தொடர்ந்து பெரும் முன்னேற்றம் பெற முடியவில்லை.

நாளடைவில் கனம் குறைந்த அதேசமயம் ஆற்றல் மிக்க என்ஜின்கள் ஆகாயக் கப்பல்களுக்கெனக் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை ஆகாயக் கப்பல்களில் பொருத்தி வானில் செலுத்தினர். இம்முயற்சியில் முதன்முதலில் வெற்றிபெற்ற பெருமை ஹென்றி ஃபோர்டு என்ற ஃபிரெஞ்சு விஞ்ஞானியைச் சாரும். இதன்பின் ஆகாயக் கப்பலின் வடிவமைப்பில் மேலும் சில மாற்றங்களை வேறு சில விஞ்ஞானிகள் செய்து வளர்ச்சிக்கு வழிகோலினர். இதன்பிறகும் கூட மணிக்குப் பத்து மைல் வேகத்திற்கு மேல் செல்ல அவற்றால் இயலவில்லை. அதிகநேரம் ஆகாயக் கப்பலைச் செலுத்த முடியவில்லை. இவை இவற்றின் பெருங்குறையாக இருந்தன.

காலப்போக்கில் கனமில்லாத அலுமினியத் தகடுகளும் பெட்ரோல் என்ஜினும் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றைக் கொண்டு ஆகாயக் கப்பலை இயக்கத் தொடங்கிய பின்னரே விரைவான வளர்ச்சிக்கு வழி பிறந்தன.

முதல் உலகப்போருக்கு முன் ஜெப்பலின் எனும் ஜெர்மானிய இராணுவ அதிகாரி வலுவான நீண்டதூரம் விரைந்து செல்லக்கூடிய ஆகாயக் கப்பலை உருவாக்கினார். இவை பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டது. 227மீட்டர் நீளமும் 24 மீட்டர் விட்டமும் 25 இலட்சம் கன அடி கொள்ளளவும் உடையதாக இருந்தது. 112 கி.மீ. வேகத்தில் பல ஆயிரம் கி.மீ.கள் தொடர்ந்து பயணம் செல்ல இதனால் இயன்றது. இந்த ஆகாயக் கப்பல்கள் அவற்றை வடிவமைத்தவரின் பெயராலேயே 'ஜெப்பலின்’ என்றே அழைக்கப்பட்டது.

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு இத்தகைய ஆகாயக் கப்பல்களை யாரும் உருவாக்கவோ பறக்கவிடவோ கூடாது என ஜெர்மனி தடைவிதித்தது. ஆனால் 1926ஆம் ஆண்டில் இத்தடை நீக்கப்பட்ட பிறகு மேலும் பலம் பொருந்திய ஆகாயக் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. ஐந்து என்ஜின்கள் பொருத்தப்பட்ட ஆகாயக் கப்பல் புதுவகை எரிபொருளைக் கொண்டு பறக்கவிடப்பட்டது. இதில் விமானிகளைத் தவிர்த்து பயணிகள் அமருமிடமும் உணவுக் கூடமும் பத்து படுக்கையறைகளும் அமைந்திருந்தன. இது மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் 10,000 கி.மீ. கள் வரை சென்றது. 1928இல் உருவாக்கப்பட்ட ஆகாயக் கப்பல் 1988-லிருந்து 1987 வரை ஜெர்மனிக்கும் தென் அமெரிக்காவுக்கு