பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்டோ நிக்கோலஸ் அகஸ்ட்

43

மிடையே போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

1986இல் இதற்கு முன் வானில் பறந்தவைகளை விடப் பெரியதாக ஆகாயக் கப்பல் உருவாக்கப்பட்டது. 'ஹிண்டன்பர்க்' எனும் பெயர் கொண்ட இவ்வானக் கப்பல் 808 அடி நீளமும் 185 அடி விட்டமும் எழுபது இலட்சம் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். நான்கு டீசல் என்ஜின்களால் இயங்கிய இதன் கூண்டுக்கடியில் 50 பயணிகள் செல்ல வசதி செய்யப்பட்டிருந்தது. பலமுறை அட்லாண்டிக் கடலைக் கடந்தது. 1937இல் எதிர்பாராத விதமாக நியூயார்க்கில் இறங்கும்போது தீப்பிடித்து எரிந்துவிட்டது. இதன்பின் ஆகாயக் கப்பலில் பயணம் செய்ய யாரும் முன்வர வில்லை. இதனால் ஆகாயக் கப்பல் போக்குவரத்து அடியோடு நின்றுபோயிற்று.

ஜெர்மனியைப் பின்பற்றி இங்கிலாந்தும் -100, -101, என்ற ஆகாயக் கப்பல்களை உருவாக்கி வானில் பறக்கவிட்டது. 1980இல் இந்தியாவை நோக்கி வந்த -101 ஆகாயக் கப்பல் ஃபிரான்சுக்கருகில் மலை முகட்டில் மோதி சிதைந்தது. இதில் பயணம் செய்த விமான அமைச்சர் உட்பட 46 பேர் மாண்டனர். அதன்பின் இங்கிலாந்தும் ஆகாயக் கப்பல்களை வானில் பறக்க விடுவதை நிறுத்தியது. இவ்வாறு போக்குவரத்துக்கான ஆகாயக் கப்பல்களின் வளர்ச்சி விபத்துகளின் காரணமாக முற்றுப்பெறலாயிற்று. என்றாலும் இன்றும் ஆகாயக்கப்பல் போன்ற வாயுக் கூண்டுகள் வானிலை ஆராய்ச்சிக்கென உலகெங்கும் பயன்படுத்தப்பட்டே வருகின்றன.

ஆட்டோ நிக்கோலஸ் அகஸ்ட் : இவர் முதன்முதலாக நான்கு முழு இயக்க உள்ளெரி என்ஜினை (Four Stroke internal combustic Engine) உருவாக்கியவர். ஜெர்மானியரான இவர் கண்டுபிடித்த இந்த உள்ளெரி என்ஜின் தான் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து வகை உள்ளெரி என்ஜின்களுக்கும் அடிப்படையாய் அமைந்ததெனலாம்.

இவர் ஜெர்மனியில் உள்ள ஹால் ஷாசன் நகரில் 1882ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தந்தை இவர் குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார். படிப்பிலும் பிறவற்றிலும் திறமைமிக்க மாணவராகத் திகழ்ந்தார். எனினும் பொருளாதார முட்டுப்பாட்டின் காரணமாக உயர் நிலைப்பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியவில்லை. பதினாறு வயது நிறைவதற்கு முன்பாக வணிக அனுபவம் பெறும் பொருட்டு ஒரு மளிகைக் கடையில் பணிக்கமர்ந்தார். சிறிது காலத்திற்குப் பின்னர் ஃபிராங்ஃபர்ட் நகரில் ஒரு அலுவலகத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். அதன்பின் ஒரு பயண நிறுவனத்தில் பணியாற்றினார்.

அச்சமயத்தில் ஏட்டியன் லென்வார் என்பவர் முதன்முதலாகக் கண்டுபிடித்த உள்ளெரி என்ஜின் பற்றிக் கேள்விப்பட்டார். அதைப்பற்றி மேலும் அறிவதிலும் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வமும் முனைப்பும் ஏற்பட்டது. லென்வாரின் என்ஜினைத் திரவ எரிபொருளால் இயங்கச் செய்தால் அதை ஒரு புகை போக்கியுடன் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதுபற்றி தீவிரமாகச் சிந்தித்தார். அப்படிச் செய்தால் அந்த என்ஜினை வேறுபல காரியங்களுக்கும் பயன்படுத்தி பலனடையலாம் எனக் கருதினார். இச்

ஆட்டோ நிக்கோலஸ் அகஸ்ட்

சிந்தனையின் அடிப்படையில் அவர் மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சியின் விளைவாக விரைவிலேயே உள்ளெரி என்ஜினில் காற்றையும் பெட்ரோலையும் கலக்கச் செய்யும் ஒரு புதுவகை அமைப்பை (Carburetor) உருவாக்கினார். இதற்கான புத்தாக்க உரிமைக்கு (Patent) விண்ணப்பித்தார். ஆனால், இதே மாதிரியான உள்ளெரி என்ஜின் வேறு பல