பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

இடி, மின்னல்

கனமான உருளைகளால் அழுத்தி சாலைகளை வழவழப்பாக்குவர்.

ஆஸ்பால்ட் நீரை விலக்கும் தன்மையுடையது. எனவே கூடாரங்களின் மீதும் வண்டிகளின் மீதும் போர்த்தும் தார்ப்பாலின் போர்வைகள் ஆஸ்பால்டைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. நீர் ஒழுக்கு இல்லாமலிருங்க கூரைகளின் மீது ஆஸ்பால்டை பூசுவதும் உண்டு.

இடி, மின்னல் : மழைபெய்யும் சமயத்தில் மழை மேகங்களிலிருந்து இடியும் மின்னலும் திடீரெனத் தோன்றும் ஓரிரு விநாடிகளே நீடிக்கும் இடியும் மின்னலும் பலமுறை விட்டு விட்டுத் தோன்றி மறையும். அப்போது எழும் பெரும் சத்தமே இடியாகும். இடியும் மின்னலும் ஒரே சமயத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளாகும்.

வானில் மின்னல் தோற்றம்

மழை சமயத்தில் வானில் மிதக்கும் மேகங்களில் மின்சக்தி அதிகமாக இருக்கும். மழையின்போது கருமேகங்கள் ஒன்றையொன்று நெருங்கும். அப்போது ஒன்றின் மின்சக்தி மற்றொன்றை நோக்கிப் பரவும். அப்போது கண்ணைக் கூசச் செய்யும் போரொளி உண்டாகும். அதுவே மின்னல்.

மின்னல் ஏற்படும்போது அங்கு பரவியுள்ள காற்று சூடாகிறது. வெப்பக்காற்று திடீரென பெரும் ஓசையுடன் விரிவடைகிறது. அவ்வோசையே இடியாகும். பின்னர் மீண்டும் காற்று குளிர்ந்து சுருங்குகிறது. மீண்டும் மேகங்களுக்கிடையே மின்பாயும்போது காற்று வெப்பமடைந்து பேரொலியுடன் விரிவடைகிறது. இச்செயல் அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழும்போது மழையுடன் இடியும் மின்னலும் ஏற்படுகிறது.

இடியும் மின்னலும் ஒரே சமயத்தில் நிகழ்வதாகக் கூறினோமல்லவா? அப்போது மின்னல் ஒளியை முதலில் பார்க்கிறோம். பின்னரே இடியோசையைக் கேட்கிறோம். இதற்குக் காரணம்