பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

இரத்தம்

நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியனவாகும்.

பூமியைக் குடைந்து நிலக்கரி, பெட்ரோல் எடுக்கும்போது ஒருவகை எரிவாயு வெளிப்

இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf

படும். இதுவே 'இயற்கை எரிவாயு' எனப்படுகிறது. சில சமயங்களில் பூமிப் பிளவினூடே இவ்வாயு தானாக வெளிப்படுவதும் உண்டு. இவ்வாயு பல்வேறு வகையான வாயுக்கள் கலந்துள்ள கூட்டுக் கலவையாகும்.

நீண்டகாலமாக இவ்வாயு எவ்விதப் பயனுமின்றி காற்றோடு கலந்து கொண்டிருந்தது. பெட்ரோல் எடுக்கும்போது வெளிப்படும் வாயுவை வானில் செலுத்தி வீணே எரியச் செய்தும் வந்தார்கள். இதனால் பயனேதும் இல்லாமல் இருந்தது. அண்மைக்காலமாக இவ்வியற்கை வாயுவை மிகச்சிறந்த எரிபொருளாகப் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர்.

பூமிக்குள்ளிருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயுவைக் குழாய்கள் மூலம் தொழிற் சாலைகளுக்குக் கொண்டு சென்று எரிபொருளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வெரி வாயுவைக் கொண்டு கொதிகலன்கள் வெப்பமூட்டப்படுகின்றன. இயற்கை எரிவாயுவைக் கொண்டு மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் எரிவாயுவாகப் பயன்படுவது போன்றே வீடுகளிலும் சமையல் அடுப்புகளுக்கான எரிவாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

எரிசக்தியாக மட்டுமின்றி பல்வேறு வேதியியற் பொருட்களை உருவாக்கவும் இயற்கை வாயு பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையில் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொருட்கள் எரிவாயுவால் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இயற்கை எரிவாயு உலகின் பல பகுதிகளிலும் கிடைக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், சீனா, ரஷ்யா, இந்தியா, ருமேனியா ஆகிய நாடுகள் அவற்றுள் முக்கியமானவையாகும்.

இயற்கை எரிவாயு எளிதான, சிக்கனமான எரிபொருள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இரத்தம் : உயிரின வாழ்வுக்கு மிக இன்றியமையாத ஒன்று இரத்தமாகும். நீர்ம வடிவிலான இஃது சிவப்பு நிறமுடையது இஃது உடலெங்கும் செல்வதால் இரத்தச் சுழற்சிச் செயல் இடையறாது நடைபெறுகிறது. ஒவ்வொரு மனிதரின் உடலிலும் சுமார் ஐந்து லிட்டர் இரத்தம் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர்.

இரத்தம் நம் சுவாசக் காற்றுகளை உடலெங்கும் எடுத்துச் செல்லும் துணைவனாகவும் இருக்கிறது. நுரையீரலிலிருந்து பிராணவாயுவாகிய ஆக்சிஜனை உடலெங்குமுள்ள திசுக்