பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

இரத்த அணுக்கள்

ஆகியன இருக்கும். இதற்கு நியூக்ளியஸ் எனும் மூலக்கூறு இல்லை.

சிவப்பணுக்கள் உடலிலுள்ள எலும்புகளில் உட்பகுதியில் உள்ள மஜ்ஜையில் உற்பத்தியாகி இரத்தத்தில் கலந்து மிதக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் இவை கல்லீரலுள்ளும் மண்ணிரலுள்ளும் புகுந்து அழி கின்றன.

ஆண்களின் ஒரு கனசதுரமீட்டர் இரத்தத்தில் சுமார் 5 இலட்சம் சிவப்பணுக்கள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள். ஆனால் பெண்களுக்குச் சற்றுக் குறைவாக நாலரை இலட்சம் சிவப்பணுக்கள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். வானில் 1,000அடி உயரத்தில் இருக்கும்போதும் உடற்பயிற்சி செய்யும் போதும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவை நமக்கு அரிய பணிகள் பலவற்றை ஆற்றுகின்றன. நாம் சாதாரணமாக மூச்சை உள்ளே இழுக்கும்போது பிராணவாயுவை

சிவப்பனுக்கள்

சுவாசிக்கிறோம். நுரையீரலுக்குச் செல்லும் இப்பிராணவாயுவை உடலெங்கும் உள்ள திசுக்களுக்கு எடுத்துச் செல்பவை இச்சிவப்பணுக்களே ஆகும். பின் அங்கிருந்து அசுத்தக் காற்றை நுரையீரலுக்குக் கொண்டு வருகின்றன. இப்பணியை நிறைவேற்றும் வகையிலேயே இரத்தவோட்டம் உடலெங்கும் இடையறாது ஓடிக்கொண்டே இருக்கிறது. சிவப்பணுக்கள் 120 நாட்கள்வரை உயிர் வாழும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் இரத்தச் சோகை நோய் உண்டாகும்.

சிவப்பணுக்களைவிட வெள்ளையணுக்கள் உருவில் பெரியனவாகும். ஆனால் எண்ணிக்கையில் வெள்ளையணுக்கள் சிவப்பணுக்களைவிட குறைவாகவே உள்ளன. சுமார் ஆயிரம் சிவப்பணுக்களுக்கு ஒரு வெள்ளையணு வீதம் உள்ளன. வெள்ளையணுக்களுக் கென்று தனி வடிவம் ஏதும் இல்லை. இவை அடிக்கடி தன் உருவை மாற்றிக் கொண்டே இருக்கும்.

வெள்ளணுக்கள்

இரத்தத்தில் நோயைத் தோற்றுவிக்கும் கிருமிகள் நுழைந்துவிட்டால் அவற்றை அழித்தொழிக்கும் பணியை வெள்ளையணுக்கள் செய்கின்றன. இவ்வகையில் உடலின் பாதுகாப்புப் படையாகவே இவை அமைந்துள்ளன. எங்கே நோய்க்கிருமிகள் இருக்கிறதோ அங்கே வெள்ளையணுக்கள் திடீர் வளர்ச்சி பெற்றுப் பெருகிவிடும். இதன் மூலம் நோய்க் கிருமிகளை எதிர்த்து வெள்ளையணுக்கள் போரிடுகின்றன. இப்போரில் தோற்றுமடியும் வெள்ளையணுக்களே சீழாக வெளிப்படுகின்றன. ஒரே சமயத்தில் ஒரு வெள்ளையணு 5.25 நோய்க்கிருமிகளை உட்கொள்ளுகின்றன. முதியவர்களைக் காட்டிலும் இளையோரின் இரத்தத்தில் அதிக வெள்ளையணுக்கள் இருக்கின்றன.

இரத்த அணுக்கள்

நோயின்போது வெள்ளையணுக்கள் வெகுவாகப் பெருகிவிடும் எனக் கண்டோம். இரத்தப் புற்று நோய் ஏற்படும்போது வெள்ளை