பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரைப்பை

71

கலந்தே இருக்கும். கரி கலந்துள்ள விகிதத்தையும் அளவையும் கொண்டே இரும்பின் தன்மை கணிக்கப்படுகிறது. இத்தன்மைக் கொப்ப இரும்பு 1. வார்ப்பிரும்பு (Cast Iron) 2.தேனிரும்பு (Wrought iron)8. எஃகு (Steel) என மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

வார்ப்பிரும்பே இரும்பு வகைகளில் முக்கியமானதாகும். மற்ற இருவகை இரும்புகளிலும் உள்ளதைவிட இதில் கரியின் அளவு அதிகமாக இருக்கும். இரும்பு 90 சதவிகிதமும் கரி 4 சதவிகிதமும் இருக்கும். கரியோடு சிலிக்கான், பாஸ்ஃபரஸ், கந்தகம், மாங்கனிஸ் போன்ற தனிமங்களும் கலந்திருக்கும். இது பளபளப்பாகவும் பழுப்பு நிறமுடையதாகவும் இருக்கும். இது உடையும் தன்மையுடையது.

தேனிரும்பில் வார்ப்பிரும்பில் உள்ளதை விட கரியின் அளவு குறைவாகவே இருக்கும். இது வார்ப்பிரும்பைவிடத் தூய்மையானதாகும் இது சற்று வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாகும். இதைக் கம்பியாகவும் தகடாகவும் அடிக்கலாம். இது வளையுமே தவிர உடையாது.

எஃகானது மற்றைய இரு இரும்பு வகைகளில் உள்ள கரியுடன் ஒப்பிடும்போது இதில் கரி இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையிலேயே அமைந்திருக்கும். கரி சுமார் 0.2இல் இருந்து 2 சதவிகிதம் இருக்கும். இரண்டையும் விட இது கடினமானதாகும். எஃகு துருப்பிடிப்பதில்லை. எஃகில் சேர்க்கப்படும் தனிமங்களின் அளவைப் பொருத்து அதன் தன்மையும் பயன்களும் மாறுபடும்.

இரும்புத் தொழிற்சாலைகள் கோவா, மத்தியப்பிரதேசம், பீகார், ஒரிசா, கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன. இந்தியாவில் மொத்தம் 1757.8 கோடி டன் இரும்பு இருப்பு இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வடாற்காடு, தென்னாற்காடு, சேலம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் இரும்புப் படிவுகள் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். சேலம் மாவட்டக் கஞ்சமலைப் பகுதிகளில் உயர்தர இரும்புத்தாது கிடைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஜாம்ஷெட்பூர், துர்க்காபூர், பிலாய், ரூர்கலா, பத்ராவதி, பொக்காரோ, சேலம் முதலிய இடங்களில் பெரும் இரும்புத் தொழிற் சாலைகள் அமைந்துள்ளன.

இரைப்பை : உணவு செரிமான உறுப்புகளுள் மிக முக்கியமானது இரைப்பை (Stomach) ஆகும். உணவுக்குழலுக்கு கீழாகவுள்ள பருத்த பகுதியாகும். இதன் மேல் பகுதியோடு உணவுக்குழல் முடிகிறது. இதன் கீழ்பகுதியிலிருந்து குடற்பகுதி தொடங்குகிறது. வயிற்றின் மேற்பகுதியில் இடப்புறமாக அமைந்து உள்ளது. இரைப்பையின் அளவு சிறுவர்களுக்கு 1 லிட்டர், பெரியவர்களுக்கு 2 லிட்டரிலிருந்து 8 லிட்டர்வரை இருக்கும்.

இரைப்பையினின்றும் சிறுகுடலை நோக்கிச் செல்லும் பகுதி ‘குடல் வாய்’ என அழைக்கப்படுகிறது. இரைப்பையின் மேற்புறம் வயிற்றுறையால் ஆகியது. உட்புறம் சளி போன்ற கோழைப்படலத்தால் ஆகியுள்ளது. இரைப்பையில் உணவு எதுவும் இல்லாதபோது சுருங்கி ஒரு குழாய் போல் தோற்றமளிக்கும். வேண்டிய அளவுக்கு உணவு சென்றடைந்ததும் உணவின் அளவுக்கேற்ப விரிந்து பருத்

இரைப்பை

துக் காணப்படும். இரைப்பைக்கு உணவு வந்து சேர்ந்தவுடன் உட்புறக் கோழைப்படலத்திலிருந்து இரைப்பை நீரைச் சுரக்கும். இந்நீரில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பெப்சின் என்ற சீரண நீரும் இருக்கின்றன. இரைப்பைக்குள் வரும் திட உணவை திரவ உணவாக ஹைட்ரோ குளோரிக் அமிலம்