பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

இன்சுலின்

மாற்றுகிறது. அவ்வாறே பெப்சின், உணவை நன்கு சீரணமடையச் செய்கிறது. புரதச் சத்துக்களை சீரணிக்க பெப்சின் உதவுகிறது.

ரெனின் என்ற என்ஸைம் பாலை நன்கு உறையச்செய்து அதன் சத்துக்களைப் பிரித் தெடுத்து இரத்தத்திற்கு தருகிறது.லைப்பேஸ் என்ற என்ஸைம் கொழுப்புச் சத்தை சீரணிக்க உதவுகிறது. இரைப்பைக்கு மூளையிலிருந்து வேகஸ் (Vagus) என்ற நரம்பு வருகிறது. இது இரைப்பை சீரண நீரை சுரக்க உதவுகிறது.

இரைப்பையினுள் இருக்கும் உணவை அங்கு சுரக்கும் சீரண நீர் கரையச் செய்கிறது. இதற்கேற்ப இரைப்பைச் சுவர்கள் அடிக்கடி

இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf
சத்துருஞ்சி

சுருங்கி விரிவதால் உணவு சீரன நீரால் நன்குகுழைக்கப்பட்டு கூழாகக் கடையப்படுகிறது. கஞ்சிபோன்று திரவநிலைக்கு மாறிய உணவு குடல்வாய் வழியாக சிறிது சிறிதாகத் திறக்க குடற் பகுதிக்கு கூழாக்கப்பட்ட உணவு செல்லுகிறது. பெருங்குடல், சிறுகுடல் பகுதி வழியே செல்லும் உணவிலுள்ள சத்துப் பொருட்கள் குடற் பகுதிகளில் உள்ள சத்துருஞ்சிகளால் உறிஞ்சப்படுகின்றன. சத்தற்ற சக்கை மலக்குடல் வழியே வெளியேற்றப்படுகிறது.

கார உணவுகளாலும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதிக அளவில் தங்க நேரிட்டாலும் இரப்பையில் புண் ஏற்படும். இப்புண் ஆறுவது சற்றுக் கடினமாகும். இந்நோய்க்கு அளவுக்கதிகமான மனக் கவலையும் காரணமாகும்.

இழைகள் : மென்மையான நீண்ட நூல் போன்ற இழைமப் பொருள் 'இழைகள்’ ஆகும். இதை நார் என்றும் கூறுவார்கள். இஃது ஆங்கிலத்தில் ஃபைபர் (Fibre) என அழைக்கப்படும். இழைகளின் முக்கியத் தன்மை அதன் இழு வலிமை, அதன் மென்மைத் தன்மை, நீரை உறிஞ்சும் ஆற்றல், வெப்பத்தைக் கடத்தும் குணம் ஆகியவற்றைக் கொண்டு கணிக்கப்படும். இழைகளின் மிகச் சிறியது பட்டு இழை, மிகப் பெரிய இழை தடித்த சணல் இழையாகும்.

இழைகள் இயற்கை இழை, செயற்கை இழை என இருவகைப்படும். இயற்கை இழைகள் பெரும்பாலும் தாவரப்பொருட்களிலிருந்தும் பிராணிகளிடமிருந்தும் பெறப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானது பருத்தி, சணல், ஆளிச்செடி, ராமி எனும் சீனப்புல், கற்றாழை நார் முதலியன தாவரங்களிலிருந்தும் கம்பளியும் பட்டும் ஆடு, பட்டுப்பூச்சிபோன்ற உயிர்வாழ் இனங்களிலிருந்து பெறப்படுகின்றன.

செயற்கை முறையில் இழைகள் தயாரிக்கும் முறை சென்ற நூற்றாண்டில் கண்டறியப்பட்டது. முதலில் தாவரப்பொருட்களிலுள்ள செல்லுலோசைக் கொண்டு செயற்கை இழைகள் தயாரிக்கப்பட்டன. இவை ரயான் (Rayon) என்ற பெயராலும் அழைக்கப்பட்டன. இவ்விழைகள் பட்டை ஒத்தவைகளாகும்.

ஆஸ்பெஸ்டாஸ் எனும் கல்நார்ப் பொருளிலிருந்தும் கண்ணாடியிலிருந்தும் இழைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றால் உருவாக்கப்படும் பொருள் வெப்பத் தடுப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று வேதியியலின் துணையோடு விதவிதமான இழைகள் செயற்கை முறையில் உருவாக்கப்படுகின்றன. இவ்விழைகளைக் கொண்டு லினன், நைலான், டெரிலீன் ஆடைகள் உருவாக்கப்பட்டு மக்களால் விரும்பி அணியப்படுகின்றன.

இன்சுலின் : இது கணையத்திலுள்ள லாங்கர் ஹான்ஸ் எனும் திசுக்களால் சுரக்கப்படுகிறது. இது ஒருவகை ஹார்மோன் ஆகும். இது நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் உணவுப் பொருளின் வளர்சிதைவு மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். சர்க்கரையும், கார்போஹைட்ரேட் வகையைச் சேர்ந்ததுதாம். நம் உடலில் ஓடும் இரத்தத்தில் சாதாரணமாக 5 சதவிகிதம் சர்க்கரைச் சத்துக் கலந்துள்ளது. கல்லீரல் வாயிலாகவே சர்க்கரைச் சத்து இரத்தத்துடன் கலக்கப்படுகிறது. அது மட்டுமின்றி கல்லீரல் சர்க்கரையை கிளைக்கோஜனாக மாற்றித் தன்னிடமே சேமித்து வைத்துக் கொள்கிறது, திசுக்கள் தங்களுக்கு