பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடவர் சிநேகமும் ஆபத்தும்

97



அதற்குள் குதிரை என்னருகே வந்துவிட்டது. அதில் ஒரு வாலிபன் ஏறியிருந்தான். அவன் உடை முதலியவற்றையும், குதிரையையும் பார்க்கும்போது போலீஸ் இலாகாவில் சம்பந்தப்பட்ட ஒரு ஆங்கிலேயன் போல் காணப்பட்டது.

நான் நடுக்கத்தோடு ஒதுங்கி நிற்பதைக் கண்டு சம்சயித்தோ என்னவோ, அவ்வாலிபன் குதிரையை நிறுத்தி