பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அமர்த்தலாகவே பேசினர். அதற்கேற்பவே முதலியாரும் உரையாடி அவர் நிபந்தனைகளைச் சிறிது விட்டுக்கொடுக்கும். படிச் செய்துவிட்டார். பரீகூைடிக்கு ஆஜராகும் வரை நான் எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களை (Subjects)ப் போதிப்பதற்கு 300-ரூபாய் கொடுப்பதாக என் தந்தை இசைந்தார். அத்தொகையை முன் கூட்டியே கட்டிவிட

வேண்டுமென்று பிரின்ஸிபால் குறிப்பிட்டார். அவ்வாறே. ஒப்புக்கொள்ளப்பட்டது. மஹிளாதேவியின் வசீகர வதன

மும், வாக்கு வன்மையும் என்ன மிகவுங் கவர்ந்தமையால் அப் பெண்மணி தலைமையில் படிப்பதைக் குறித்து நான்

பெரிதும் பெருமையுற்றேன்.

சர்க்கார் அங்கீகாரம் பெற்ற கலாசாலைகள் நடப்பது போலவே, மஹிளாதேவி டியூடோரியல் கலாசாலேயும் கடைபெற்றது. எஸ். எஸ். எல். ஸி. முதல் எம். ஏ. வரை வகுப்புகள் இருந்தன. நான்கு இந்துப் பெண்மணிகளும், ஒரு ஆங்கிலோ இந்திய மாதும், இரு கிறிஸ்தவ மங்கை மாரும் ஆசிரியைகளாக இருந்தனர். எல்லா வகுப்புக்களுக் குஞ் சேர்ந்து சுமார் 60 மகளிர் மாணவிகளாகச் சேர்க் திருந்தனர்.

கலாசாலை ஆரம்பித்து ஒரு வாரமாயிற்று. நான் தினங் -- தோறும் ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தேன். இதற். இடையே ராஜதானி கலாசாலையில் என்ைேடு வாசித்த கண் பர்கள் சிலர்-குறிப்பாக நீரஞ்சனி, தாமோகான் ஆகி யோர் நேரே வந்து, நான் திடீரென்று அக் கலாசாலையை விட்டுகின்று அவர்களைப் பிரிந்ததற்காக வருத்தங் தெரிவித் துச் சென்றனர். அவர்கள் தங்கள் சிநேகத்தை மறந்து விடக் கூடாதென்றுங் கேட்டுக்கொண்டனர். இவ்விடத்தி லும் சில பெண்கள் எனக்குச் சிநேகமாயினர். இவர்களில்