பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தத்திலுள்ள விஷயம் மிக அந்தரங்கமாக வைக்கப்பட்டி ருக்கிறது. அவர்கள் கூடிய சீக்கிரம் மாஜிஸ்டிரேட் முன் விசாரணைக்குக் கொண்டுவரப்படுவார்கள்.

இதைப் படித்ததும் என் மனம் பலவிதமாக வெல் லாம் எண்ணியது. இது சம்பந்தமாக, யானும் என் தக் தையும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கடைசி யாக என் தந்தை ஆயாசத்தோடு, புவன மஹிளா தேவி யிடம் முன்பணமாகக் கட்டிய 300 ரூபா தொலைந்தமாதிரி தான். இனி அதைப்பற்றி எண்ணுவதில் பயனில்லை. பழையபடி நீ ராஜதானி கலாசாலைக்கே போய்வா. திடீ ரென்று சொல்லாது இரண்டு வாரத்துக்கு மேலாக கின்று விட்டதைப்பற்றிக் கலாசாலே அதிகாரிகள் தகராறு செய் யக்கூடும். அதற்கு நான் தகுந்த சமாதானஞ் சொல்லிச் சரிப்படுத்திவிடுகிறேன். என்ன சொல்லுகிருய் அம்மா!” என்று கேட்டார்.

"அப்படியே போகிறேன் அப்பா' எனக் கூறினேன். அதற்கப்புறம் நான் முன்போலவே தினந்தோறும் ராஜ கானி கலாசாலைக்குச் சென்று படித்து வந்தேன். நான் மறுபடியும் சேர்ந்து படிக்கத்தொடங்கியது, பிரிந்துபோன "வித்து வருத்தக் தெரிவித்த என் நண்பர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையுங் குதூகலத்தையுங் கொடுத்தது. ஆனல் புரொபஸர் சம்பத் மட்டும் என் முகத்தில் விழிக்கத் துணி 4ாது, என்னத் துரத்தில் பார்க்கும்போதே ஒளிந்து தலை

மறைந்து வந்தார்.

மஹிளா தேவியின் தொடர்பு எனக்கு ஏற்பட்டு ஒரு சில காட்களே யாயினும் அவளை எளிதில் மறக்க முடிய வில்லை. என் கண்ணெதிரே போலீஸார் அவள்மீது மோச