பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹிளாதேவி கலாசாலை மர்மம் 131.

டிச் குற்றஞ் சாட்டிக் கைது செய்துகொண்டு போனலும், என் மனம் அவளைக் குற்றவாளியென்று கருதவும் இடம் கொடுக்கவில்லை. அவளுக்கும், அவளது கணவனுக்கும் யாராயினும் விரோதிகள் இருந்து, சதி செய்து அவர்கள் மீது மோசடிக் குற்றத்தை யேற்படுத்தி யிருக்கக்கூடும் என்று என் பேதை மனம் எண்ணியது; நம்பியது. ஆகவே அவர்கள் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கின் முடிவை யறிய, ஒவ்வொருநாளும் தவருது பத்திரிகையில் அவ்வழக் கின் விசாரணையைப் படித்து வந்தேன். விசாரணையின் போது பல உண்மைகள் வெளியாயின. எதிரிகளாகிய இவ் விருவர் செய்த சதிக்கு உதவியாக இருந்ததற்காக பர்மாவி லிருந்து மூன்று பேரும், வங்காளி மகளிர் நான்கு பேரும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். இவ்வழக்கில் சர்க் கார் தரப்பில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளில் என் தந்தை யும் ஒருவராவர். முடிவில் சிப் பிரஸிடென்ஸி மாஜிஸ்திரேட் பொருள் சம்பாதிக்கும் கோக்கத்தோடு, சென்னை சர்க்கா ரையும், பொது மக்களேயும் எககாலத்தில் ஏமாற்றி, படிக்க பெண்கள் வாயிலாகப் பொருளேக் கொள்ளை படித்ததாகக் குற்றஞ்சாட்டி முதல் எதிரியாகிய விமலேந்த போஸுக்கு 10 வருஷமும், மஹிளாதேவிக்கு 6-வருடமும், மற்ற எதிரி களில் ஆடவர்களுக்கு நான்கு வருடமும், பெண்களுக்கு இரண்டு வருடமும், கடுங்காவல் தண்டனை விதித்தார். அத் தீர்ப்புச் சரியானதல்லவென்று கூறி எதிரிகள் மேல் கோர்ட் டுக்கு அப்பீல் செய்துகொண்டனர். அங்கும் கீழ்க் கோர்ட்டுக் தீர்ப்பே நீதிபதிகளால் ஊர்ஜிதப் படுத்தப்பட் டது. எனவே, விமலேந்த போஸும் மஹிளா தேவியும் எவ் வளவோ சாமர்த்தியமாக தாங்கள் குற்றவாளிகளல்ல வென்று சாதிக்க முயன்றும் ஒன்றும் முடியாது கடைசி யாகக் காராக்கிருகம் புகுந்தனர்.