பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

எல். எல். பி. என்னும் உயர்தா பட்டம் பெற்ற வங்காளப் பெண்மணியானள். (இதிலிருந்து அவளது இயற்பெயர் மஹிளாதேவி யல்லவென்றும் தங்கள் காரியத்திற்காகவே வைத்துக்கொண்ட மாறுபெயரென்றும் தெரிந்துகொள்ள லாம்) கலாசாலே சம்பந்தப்பட்ட சகல விஷயங்களுக்கும் அவளே சர்வாதிகாரியானுள். விமலேந்த போஸ் மறைமுக 'மாக அடிக்கடி அவளுக்கு யோசனை கூறிக் காரியத்தைத் திறமையாக நடத்திவந்தான். வெளியிலிருந்து வந்த பெண் கள் உண்மையிலேயே எம். எ. எல். டி., பி. எ. எல். டி. பட்டம் பெற்றவர்களாகையால், ஆசிரியைகளாயினர், மானேக்காட்டி மானப் பிடிப்பதுபோல், அவர்களைக் காட்டி உள்ளூரிலிருந்தும் இரண்டு மூன்று பெண்கள் நம்பிக்கை ஏற்படுவதற்காக ஆசிரியைகளாக அமர்த்தப்பட்டனர். உத்தியோகம் வாங்கித் தருகிருேம் என்று சொல்லி அவர் களிடம் கூட துறு இருநூறு இலஞ்சம் வாங்கியதாக விசா ரணையின் போது பிரஸ்தாபிக்கப்பட்டது. ஆனல் அது ருஜவாகவில்லை. விமலேந்த போஸ் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரம் நல்ல பலனை விரைவில் கொடுத்தது. ஏராளமாகப் பெண்கள் பலவிதமான உயர்தர படிப்புகளைப் பயில்வதற். காக வந்து சேர்ந்தனர். அந்தந்த பட்டங்களுக்குத் தகுந்த வாறு ஒவ்வொரு மாணவியிடத்தும், இருநூறு, முந்நூறு, நானூறு என்று காலேஜ் கட்டணம் முன் கூட்டியே வாங் கப்பட்டது. இவ்வித நிர்வாகங்களை மீஹிளாதேவியே கவனித்து வந்தாள். விமவேந்த போஸ், மாணவிகள் வந்து சேர ஆாம்பித்த பின்னர், வெளிப்படையாக மஹிளா தேவி வின் கிர்வாகக் காரியங்களில் கலந்து கொள்வதில்லை. போலி லார் கைது செய்யப்படும் வரை மஹிளா தேவிக்குக் கண வனிருக்கிருன் என்ற லிஷயமே யாருக்கும் தெரியாது. அவ் வளவு எச்சரிகையாக அவர்கள் நடந்து வந்திருக்கின்றனர்