பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரநாதனின் கலியான வெறி 143 -

அவசரமும், முக்கியமுமான விஷயத்தைப் பேசி முடிவு கட்டவேதான் இப்போது உன்னிடம் வந்திருக்கிறேன். அதல்ை உன் தாக்கத்துக்குப் பங்கமும், சிரமமும் ஏற்பட் டாலும் பாதகமில்லை என்றே கருதுகிறேன். நமக்குக் கூடிய சீக்கிரத்தில் நடக்கப்போகும் கலியானத்தைப் பற்றி உன்னிடம் பேசாது வேறு யாரிடம் பேசுவது? இது சம் பந்தமாக உன் அபிப்பிராயத்தை அறிந்து போகவே இவ் வளவு அவசரமாக இந் நடு ராத்திரியி............................ 痺 என்று கூறி வருகையில் நான் இடைமறித்து, 'என்னl என்ன சொன்னுய் உனக்கும் எனக்குமா கலியாணம்? உன் மூளையில் என்ன கோளாரு? அல்லது வெறி ஏற்பட்டு விட்டதா? வாயில் வந்தவாறு ஏதேதோ பிதற்றுகிருயே!” என்று அடங்காக் கோபத்துடனும் ஆச்சரியத்துடனும்

சிதம்பரநாதன் அப்போதும் சாவதனமாகவே பேசத் தொடங்கி, பதட்டமாகப் பேசுவதில் பயனில்லை சுந்தரி1 விஷயத்தை முழுதும் சொல்லுவதற்குள் ஆத்திரப் படு கிருயே! உன் தாயும் தந்தையும் உன்னே எனக்கு விவாகஞ் செய்து கொடுக்கத் தீர்மானித்துவிட்டனர். தங்களது தவப்பயனப் உதித்த எக புத்திரியாகிய உனக்குத் தகுந்த வரன் யானே என்பது அவர்களுடைய கருத்து. உன் அரு மையை யறிந்து அன்பாக நடத்த என்னைவிட உலகில் வேறு யாருக்க முடியும் ஆகவே, நானும் அவர்களது விருப்பத் துக்கு மிக மகிழ்ச்சியோடு இசைந்தேன். அழகுக்கு உறை விடமாகவும், அறிவுக் களஞ்சியமாகவும் திகழும் உன்னை என் அருமை மனைவியாகப் பெறும் பாக்கியத்தை அடைக் திருக்கும் என்னைவிட அதிர்ஷ்டசாலிகள் இவ் வுலகில் யாரிருமே இருக்க முடியாது என்பது என் திடமான எண்