பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரநாதனின் கலியான வெறி 145.

செய்தாலும் உன்ன விவாகஞ் செய்து கொள்வேன் என்று மட்டுஞ் சிறிதும் கினையாதே! வேண்டுமானல் என் தந்தை

யிடஞ் சொல்லி உனக்குத் தகுக்க பெண்ணப் பார்த்துக்

கலியாணஞ் செய்து வைக்கும்படி ஏற்பாடு செய்கிறேன்.

நான் உன்னிடம் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்து

கொள்ள வேண்டுமானல், நீ என்மீது வைத்துள்ள வீண் மோகத்தை யொழித்து ஒழுங்காக நடந்துகொள்-நான்

இப்போது கலிபாணத்தைப்பற்றியே கவலையில்லாத கிலேயி லிருக்கிறேன். கலியானம் என்ருல், என்னவென்பதையே

அறியாத நிலையிலிருக்கும் எனக்கு என் பெற்ருேள் வரன்

தேடியலேவதும், அது சம்பந்தமாக நம் உறவினர் சிலர்

பேசிச் செல்வதும் வீண் பிரயாசையே யாகும். ஆனல்

என் கருத்தைப் பெற்றேரிடஞ் சொல்லத் துணிவேற்பட

வில்லை. உம்-அதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும். மீண்டுஞ்

சொல்லுகிறேன் சிதம்பர்ம்! நான் கலியாணஞ் செய்து

கொள்வது அவசியம் என்ற நிலை எற்பட்டாலும், உன்னே

விவாகஞ் செய்துகொள்வேன் என்று மட்டுங் கருகாதே!..... 始岛● 姆曾 ......."என்றேன்.

'என் என்ன விவாகஞ் செய்துகொள்ள மாட்டாய்? கான் அழகாக இல்லையா? பி. ஏ. பட்டம் பெறவில்லையா? எனக்குப் பிதிரார்ஜித சொத்தில்லையா? தகுதியும் தோற்றமு மில்லையா? அதோடு நான் உன் அம்மான் மகன் அன்ருே? நீ எனக்கு வாய்த்த அத்தை மகள் அல்லையோ! இதைவிட வேறு என்ன உரிமை வேண்டும்; நாம் விவாகஞ் செய்து கொள்வதற்கு? நீ விரும்பாவிட்டாலும் நான் உன்னை வந்து கலியாணஞ் செய்து கொள்வதற்கு உரிமை இருக் கிறது என்பதை நீ நினைவில் வைக்கவேண்டும்” என்று: உரிமை கொண்டாடிப் பேசின்ை சிதம்பரநாதன். -