பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்ணா ! பேயா !! தெய்வ மகளா!!!

9

நான் பத்துப் பதினைந்து கஜதூரம் நடந்திருப்பேன். என் காலடியோசை அவன் காதில் விழுந்து விட்டிருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, தான் செய்த மலர்களைத் தன் கூந்தலில் சூட்டிக்கொண்டிருந்த அவள் திடீரென மருட்சியோடு திரும்பிப் பார்த்தாள். ஆ! அவள் முகத்தினழகை எவ்வாறு வருணிப்பேன்! நான் என்ன கம்பனா? காளிதாசனா? அவர்களைப்போன்ற கவிஞனாக இல்லாது போய்விட்டேனே என்று தான் நான் வருந்துகிேறன். பொங்கிய கடலினின்றும் பூரித்தெழும் பூரண சந்திரனைப் போல் உருட்சியுந் திரட்சியும் பிரகாசமும் பொருத்திய முகம், அவள் பேரழகி பென்பதைத் தெளிவாகக் காட்டியது. அவளது ஆடையலங்காரத்தையும், ஒப்பனையையும் பர்த்த யான் அவள் ஒரு நவ நாகரீக நாரீ மணியென்று அறிந்து பெரிதும் ஆச்சரிய மடைந்தேன். அப்பேர்ப்பட்டவள் இம்மலைக்கு எப்படி வந்தாள் என்று என் மனதில் பெரிய ஆராய்ச்சி யுண்டாயிற்று. ஆனால், உடுத்தியிருந்த ஆடை முதலியன மரவுரிய லானவை என்று யான் உந்து நோக்கியதில் தெரிந்தது. அவள் அழகாகப் பின்னிவிடப் பட்ட கூந்தலில் காட்டுப் பூக்களை நிறையச் சூடியிருந்தாள். அவளுக்கு வயது முப்பதுக்கு மேலிருக்கும்.

அவள் என்னைக் கண்டாளோ இல்லையோ, பேயைப் பிசாசைப் பூதத்தைக் கண்டால் மக்கள் எவ்வாறு பயந்தோடுவார்களோ, அவ்வாறு முகத்தில் கலக்கத்தைக் தோற்றுவித்துக் குடிசையிருக்கும் பக்கமாக நோக்கி ஓட ஆரம்பித்தாள். இவ்வேறுபாட்டைக் கண்டதும் எனக்கு என்னென்னமோவெல்லாம் மனதில் தோன்றியது. டார்ஜான் கதையிலுள்ளதுபோல் இவள் என்ன மிருங்களால் வளர்க்கப்பட்ட பெண்ணா? அல்லது நாட்டு மக்கள் கூட்டுறவு பெறாத காட்டுச் சாதி மகளா? அவ்விதமிருந்

2