பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

இவ் வார்த்தைகளைக் கேட்டதும் நான் மலைத்து நின்று: விட்டேன். பூநீநிவாசன் என் தனிப்பட்ட விஷயத்தில் தலை யிட்டு வருவது சரியா? தவரு? என்று அச்சமயம் அறிய ஆற்றிலில்லாதவளா யிருந்தேன். எனவே, நான் பேச்சை வேறு விதத்தில் திருப்பக் கருதி, எனக்குத் தெரியாமலே, என்னென்னவோ விபரீதமெல்லாம் நடந்தேறி வருகிறதுகடைசியாக நீ அவனைத் தடியால் அடித்து வீழ்த்திவிட்டாய், பாவம்' அவன் தலையில் அடி பலமாய் விழுந்திருக்கி மதா, இரத்தம் வருகிறதா என்று பார்ப்போம்" என்று கூறிக் கொண்டே கீழே பிணம்போல் வீழ்ந்து கிடக்கும் சிதம்பர காதனைக் குனிந்து பார்த்தேன். அவன் தலையில் இரத்தம் ஒழுகவில்லையானுலும், பலமாக அடிவிழுந்திருக்கிறது என்று: அவன் இதுவரை பேச்சு மூச்சின்றிக் கிடப்பதிலிருந்து நன் முகத் தெரிந்தது. சிதம்பரநாதன் சிறிது நேரத்திற்கு முன் என்னிடம் தவருண முறையில் நடந்துகொண்டதற்காக அவன் மீது அடங்காக் கோபங்கொண்டிருந்தாலும் அவனது தற்போதைய பரிதாபமான நிலையைக் கண்ட போது என் மனம் இளகிவிட்டது. அவனுக்கு உடனே சிகிச்சை செய்யவேண்டுமென்று உன் மனதுக்குத் தோன். றியது. எனவே, நான் எனது கருத்தை பூரீநிவாசனுக்குக் தெரிவிக்கவே, அவன் ஒருவாறு முகத்தைச் சுளித்துக் கொண்டு வெளியே போய் வேலையாள் ராமனைக் கூப்பிட், டுக்கொண்டு வந்தான். பின்னர், என் யோசனையின்படி பூநீநிவாசனும், ராமனும் சேர்ந்து சிதம்பரநாதனே அவளது. அறைக்குத் தாக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்த னர்.அவனே மூர்ச்சை தெளிவித்தற்குரிய சைத்தியோப. சாரங்களை ராமன் செய்தான் ஏழை யொருவன் செல்வந் தனின் பொருளுதவியைப் பெறுவதற்காக எங்கி நிற்பது போல, நீநிவாசன் அடிக்கடி என்னே இரக்கமாக நோக்.