பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தால் இவள் இவ்வளவு நாகரிகமாய்த் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்க முடியாதே! எவ்வாறேனும் இவளை யணுகி இவள் யார் என்பதை யறிந்துகொண்டு விடவேண்டும்!” என்று நினைத்து மிகவும் துணிவாக அவள் ஓட எத்தனிப்பதற்கு முன் நான் மிக வேகமாக ஒடி அவளை வழி மறித்து நின்றேன்.

எனது இம் மீறிய செயலைக் கண்டதும் அம் மங்கை ஒன்றுந்தோன்றாது திகைத்து நின்றுவிட்டாள். நான் முதலில் ஏதோ அசட்டுத் துணிவோடு வழிமறித்தேனே யொழிய, அவள் எதிர் நின்றதும் என் நாவெழவில்லை; நானும் உயிர்ப் பதுமைபோல் அசைவற்று நின்றுவிட்டேன். ஆனால் அவள்மட்டும் தன் அழகிய முகத்தை வேறொரு பக்கங் திருப்பிக்கொண்டிருந்தாள். இதனால், பொதுவாக மகளிர் நாணங்கொள்வதுபோல் அவள் ஆடவனாகிய என்னைப் பார்த்து நாணங்கொண்டாள் என்று சொல்லிவிட முடியாது. அதற்குப் பதிலாக, என்னைக் கண்டதனால் அவளுக்குண்டான வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டினாள் என்றே கூறவேண்டும்.

அதோடு, அவள் என் முன்னே அவ்வாறு நீண்ட நேரமிருக்க விரும்பாதவள் போலவும், சமயம் நேர்ந்தால் என்னைத் தாக்கி வீழ்த்திவிட்டாயினும் ஓடிவிட வேண்டுமென்ற எண்ணங்கொண்டவள் போலவும் இருந்தாள் என்பது அவளது மெய்ப்பாட்டிலிருந்து அறிந்தேன். இக்குறிப்பை யுணர்ந்ததும் நான் அவள் அவ்விதம் செய்ய, முயலுமுன், ‘அவள் யார்? அவள் இவ்வடலியில் எவ்வாறு வந்தாள்? ஏன் வந்தாள்?’ என்பனவற்றை அறிந்துகொண்டு விடவேண்டுமென்று பதைபதைத்தேன்.என் காதல் ஏமாற்றத்தினால் உலகத்தை – முக்கியுமாகப் பெண்ணுலகையே இதுவரை, வெறுத்து வந்தேனாயினும், இப்பெண்மணியைக்