பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

直70 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வந்தவள்போல், திடீரென்று, அம்மாது கடலில் குதித்தாள். இதைக் கண்டதும் நான் திகைத்து கின்றுவிட்டேன். ஆனல் என்னை யறியாது என் வாய் 'ஒ'வென்று கூவியது. என் கூச்சல் பெரிய சப்தத்தை யுண்டுபண்ணி யிருக்க வேண்டும். உடனே காப்டனும், உத்தியோகஸ்தர்களும், மாலுமிகளும் வடக்கேயிருந்து ஓடி வந்தனர். என் சிற்றப் பாவும் திடுக்கிட்டு ஓடி வந்தார். சிறிது நேரத்தில் மற்ற வர்களும் தங்கள் தங்கள் இடத்தைவிட்டு ஒடி வந்துவிட்ட னர். எல்லாரும் என்னைச் சூழ்ந்துகொண்டு, என்ன என்ன விஷயம்" என்று பரபரப்போடு கேட்டனர். எனக்கு வாய் திறந்து ஒன்றும் பேசமுடியவில்லை. ஊமைபோல், அம்மாது விழுந்த இடத்தைக் கையால் சுட்டிக் காட்டி னேன். எல்லோரும் விரைந்தோடிப் பார்த்தனர். நானும் ஒடினேன். என் கண்கள் அம்மாது விழுந்த இடத்தை விரைவில் கண்டு பிடித்துவிட்டது. உடனே, அகோ. அதோ' என்று சுட்டிக் காட்டிக்கொண்டே பைத்தியக் காரிபோல் கூவினேன். அக்கணமே ஒரு மாலுமி, லேப் பெல்ட்" Life-belt என்னும் ஒருவகை ரப்பர் டயரைத் துக்கி - அம்மாது விழுந்து தத்தளிக்கும் பக்கமாக விசி யெறிந்தான். மற்ருெருவன் கயிற்றேணியைக் கட்டித் தொங்கவிட்டு விரைந்து இறங்கினன். காப்டனும் மற்றவர்களும் ஆவ லோடும், பரபரப்போடும் பார்த்துக்கொண்டு மாலுமியைச் சைகை காட்டி எவினர். லேப் பெல்ட்" அம்ம்ாது அருகே மிதந்து சென்றும், அதைப் புணையாகப் பற்றிக்கொள்ள விரும்புவதாகத் தெரியவில்லை. r r

அச்சீமாட்டி கைகளையும் கால்களையும் உதறி யாட்டிக் காண்டிருந்தாளே யொழிய, தான் உயிர் தப்பித்துக்கொள் னப் பற்றுக்கோடு அகப்பட்டதே யென்ற ஆவலோடு அந்த கல்ப்-பெல்டை'ப் பற்றிக்கொள்ள முயலவில்லை.