பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன்மாங்களின் சிறப்பு 177°

டோம். கப்பல் விட்டிறங்கும்போதே எனக்கு லண்டன்மா நகர் காட்சியளித்தது. நகரினுள் செல்லும்போது பூத உட லோடு சுவர்க்கம் புகுவது போன்ற ஒருவித புத்துணர்ச் சியை யடைந்தேன்.

லண்டன்மாநகரின் அமைப்பையும், கம்பீசக் தோற். றத்தையும் என்னென்பேன்! வானளாவியமாட மாளிகை களும் கூடகோபுரங்களும் வியாபார ஸ்தலங்களும் கண் களுக்கு கல் விருந்தளிக்கக் கூடியனவா யிருக்கின்றன. மக் கள் வசிக்கும் மாளிகைகளின் மாண்பை நாள் முழுதும், பார்த்துக் கொண்டிருக்கலாம். சில தெருக்களில் நாலு கிலே மாடங்க ளமைந்த மாளிகைகளும் மற்றுஞ் சில வீதிகளில் ஐந்து நிலை மாடங்க ளமைந்த மாளிகைகளும் ஒரே தன்மை யனவாய்க் கட்டப்பட்டிருந்தன. வியாபார ஸ்தலங்கள்: தொழிற்சாலைகள், ஹாஸ்டல்கள் முதலியன மட்டும் எட்டு நிலை மாடங்களமைந்தனவாயிருந்தன. சில தெருக்களில் வெள்ளைக் கற்களாலும் கட்டப்பட்டிருந்தது பார்ப்பதற்கு விநோதமா யிருந்தன. நகரின் பல விடங்களிலும் நாடக சாலைகளும், நடன சாலைகளும், சினிமாப் படக்காட்சி சாலை களும், சித்திரசாலேகளும், பொருட்காட்சி சாலைகளும், ஏரா ளமாயிருந்தன. அதுவன்றி உய்யானவனங்களும் (Parks) பூங்காவனங்களும் (Gardens) நகரை அலங்களித்துக்கொண் டிருந்தன. தெருக்களின் ஒழுங்கை என்னென்று விவரிப் பது? பெரிய தெருக்கள் மரத்தாலமைத்த செங்கல் பதித் துத் தார்பூசி, ஒருவகைத் தாள் துளவி அழகாக அமைக்கப் பட்டிருந்தன. தெருக்களின் இரு பக்கங்களிலும் எட்டெட் டடி அகலம் சிமிண்டுக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அப் பிளாட்பாாங்களின் மீது நகரமாக்தர் கடந்து சென்று கொண்டிருந்தனர். தெருக்களின் நடுவே மோட்டார்