பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன்மா நகரின் சிறப்பு 193.

மூலையில் போய் உருண்டேன். நான் விழுந்த அதிர்ச்சி பில் உணர்வு கலங்கி மயங்கு நிலையை யடைகையில், ஜனங் கள், 'ஆ' ஆ! ஐயோ! போய்விட்டார்களே' என்று அல துஞ் சப்தங் கிணற்றிலிருந்து கேட்பதுபோல் என் காதில் விழுந்தது. - -

நான் மீண்டும் கண் விழித்தபோது ஒரு படுக்கையில் இருப்பதை யுணர்ந்தேன். என் தலை மிகவும் பளுவாய் இருந்தது. உடம்பெல்லாம் வலி யெடுத்தது. நான் சுற்று. முற்றும் பார்த்தேன். லேடி டாக்டர்களும், சர்ஸ்-களும் என்னைக் கவனித்தவண்ணம் நின்றிருந்தனர். இகளுல் நான் இருப்பது ஒரு ஆஸ்பத்திரியென்று புலப்பட்டது. அதற்கப்புறக்கான், நான் பார்லிமெண்டு சபைக் கட்டடத். துக்குச் சமீபத்தில் கில்பர்ட்டுடன், மோட்டாரிலிருந்து விழுந்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அவ்விபத்தி லிருந்து நான் எவ்வாறு உயிர் தப்பினேன் என்பது எனக்கே ஆச்சரியமாயிருந்தது. ஜான் கில்பர்ட் எக்கதி. யானுன் என்னுங் கேள்வி அடுத்தபடியாக, என் மனதில் உதித்தது. எனவே, கவலையோடு சான் என்னைச் சூழ்ந்: திருப்பவர்களே மருள மருள விழித்துப் பார்த்தேன்.

என் அருகிலிருந்த லேடி டாக்டர், லளிதமாக என் னைப் பார்த்துக் கையமர்த்திவிட்டு, ஸ்டெதாஸ்கோப்' என் உங் கருவியால் என் தேக முழுவதையும் பரிசீலனை செய் தாள்; நாடியைக் கவனித்தாள்; பின்னர் அவள் எனக்கு. உள்ளுக்கும் வெளிக்கும் மருந்துகொடுத்துவிட்டு, பக்கத்தி" லிருந்த நர்ஸிடம் எதோ சொல்லிவிட்டு அவ்விடத்தினின் மம் அகன்ருள். சிறிது நேரத்திற்கெல்லாம் என்னைக் கவ னிப்பதற்கென்றே நியமிக்கப்பட்ட மேற்படி நர்ஸ் தவிர மற்றவர்களெல்லாம் போய்விட்டனர்.