பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208. இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அதிலும் நவநாகரிக மக்கள்-அனுபவிக்க வேண்டிய இன்பம் எவ்வளவுண்டோ அவற்றில் ஒன்றைக் கூட நாங் கள் பாக்கியாக விடவில்லை. இவ்வளவுக்கும் ஆகும் செல. வெல்லாம் என்னுடையதே. ஆரம்பத்தில் தான் ஜான் கில் பர்ட் சிறிது பணஞ் செலவு செய்தான். எனக்கு மாதா மாதம் தந்தையிட மிருந்து வரும் பணமெல்லாம் காலேந்து நாட்களுக்குக் கூட வருவதில்லை. எனக்குப் பணம் வேண் டிய போதெல்லாம் என் தந்தைக் கெழுதி உடனே தருவித் துக்கொள்வேன். பணஞ் செலவாவதைப் பற்றிய கவலேயே எனக்குக் கிடையாது. நான் சிரமப்பட்டுச் சம்பாதித்தால் தானே அப்பணத்தின் அருமை எனக்குத் தெரியும்.

ஜான் கில்பர்ட், என்னைப் பணஞ் சொரியுங் தேவதை. யென்றே கருதி வந்தான். என்னைச் சதாகாலமும் புகழ்ந்து பேசுவதுதான் அவனுக்கு வேலையாய்ப் போய்விட்டது. முதலில் இம்மாதம் சென்ன்ைக்குப் போகிறேன் வருகிற மாதம் செல்கிறேன் என்று என்னிடங் கூறிவந்த அவன் எட்டு மாதங்களுக்கு பேலாகியும் போகவேயில்லை. மேலும் அவன் லண்டனில் எங்கிருக்கிருன்; என்ன செய்கிருன் என்ற விஷயமே மர்மமாயிருந்தது, அவன் சொல்வதுதான் எனக்குக் தெரியும். இருந்தாலும், இகைப்பற்றியெல்லாம் நான் சிந்திப்பதே யில்லே, அதற்கு அவகாசமுங் கிடையாது. அது "கிற்க. • -- . ... . - - - -

ஒருநாள் நான் ஹாஸ்டலி விருந்து கலாசாலைக்கும் போகத் தயாராய்க் கொண்டிருக்கையில், ஹாஸ்டல் பியூன் எனக்குத் தந்தி வந்திருக்கிறது என்று தெரிவித்தான். நான் பதை பதைப்படைந்து வெளியே வந்ததும் தந்திச் சேவகன் தந்தி யொன்றை நீட்டினன். அது எங்கிருந்து வந்திருக்கும் என்ன செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதோ என்ற