பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் என்ருல் என்ன ! பூதமா? பேயா? 21 Í

சென்று அடுத்த கணத்தில் ஜானே நானிருக்குமிடம் அழைத்து வந்தான். . . . . . . . . .

ஜான் கில்பர்ட் இயற்கையாயுள்ள புன்னகையோடு, என்ன விசேஷம் புவன மணியடித்து விட்டதே கலா சாலைக்குப் போகவில்லையா?” என்று கேட்டான். நான் அதற்கொன்றும் பதிலளிக்காமல் என் கையில் வைத்திருந்த தந்தியை அவனிடம் கொடுத்தேன். அதைப் பார்த்ததும் ஜானின் முகம் மாறுதலடைந்தது. புறப்படப் போகி முயா!” என்று அவன் தடுமாற்றத்தோடு கேட்டான்.

வேறென்ன செய்வது? நீ தான் சொல்லேன் என்றேன். நான்.

கில்பர்ட் கலே குனிந்தவண்ணம் சிறிது நேரம் ஆழ்ந்த யோசனையிலிருந்தான். பிறகு கிமிர்ந்து என்னைக் கூர்ந்து நோக்கிய வண்ணம், இத் தந்தியிலுள்ள செய்தியின் போக்கை பார்த்தால், அங்கு ஏதோ முக்கிய சம்பவம் அல் லது விபரீத நிகழ்ச்சி நேர்ந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆதலால், நீ போய்வரத்தான் வேண்டும். இதை அலட்சியப் ப்டுத்துவதற்கில்லே. நீ உடனே போய் ஹாஸ்டல் சூபரின்டெண்டிடத்தும், காலேஜ் பிரின்ஸிபா லிடத்தும் விஷயத்தைத் தெரிவித்து, இந்தியாவுக்குப் போய்வர அநுமதி பெற்றுக்கொள். நான் இதற்குள் இக் தியா செல்லுங் கப்பல் எப்போது போகிறது என்று தெரிந்து கொண்டு, உன் பிரயாணத்துக்குரிய சகல ஏற்பாடு களையுஞ் செய்துவிட்டு வருகிறேன்” என்று கூறினன். நான் அவனது யோசனையை ஆமோதிப்பதுபோல் தலே பசைத் தேன். அத்துடன் நான் 500 ரூபாயையும் அவனிடங்கக் தேன். ஜான் அதைப் பெற்றுக்கொண்டு போய்விட்டான்.